.jpg)
இக்பால் அலி-
இலங்கையில் இளம் வயதில் சதுரங்கப் போட்டியில் சாதனைகள் படைத்து வரும் 11 வயதுடைய கண்டி திரித்துவக் கல்லூரி மாணவன் ஹரிஜன் கராட்டிடுத் துறையிலும் ஈடுபட்டு மற்றுமொரு சாதனையாக தேசிய சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
சூடகன் கராட்டி நிறுவனத்தின் எட்டாவது கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவருக்கான இந்த சம்பியன் பட்டம் இம்மாதம் 14 ஆம் திகதி கிடைக்கப் பெற்றுள்ளது. 11 வயதுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இவர் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடததைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற ஒன்பது வயதுக்குக் கீழ் பட்ட ஆண்களுக்கான சதுரங்க ஒற்றையர் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டவர். இவர் 2010 போலந்து, 2011 இந்தியா, 2011 ரஷ;யா, 2014 டுபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டிகளிலும் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார். இவர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டி சாதனைகள் நிலை நாட்டுவது போன்று கல்வித் துறையிலும் மிகந்த ஆர்வம் காட்டி வருகின்றார்.
இவர் இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார்.
கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் உடுபிட்டிய அமெரிக்க மிஷன் பழைய மாணவவரும் ஆசிரியருமான குணரத்தினம் கிருபாகரன் மற்றும் திகன மாபேரித்தென்ன வித்தியாலயத்தின் ஆசிரியையான காஞ்சனா தம்பதிகளின் புதல்வராவர்.
.jpg)
.jpg)
.jpg)