சுத்தமான குடிநீர் வசதியை வழங்குவது கடமை- நிகழ்வொன்றில் அமைச்சர் ஹக்கீம்

பிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வசதியை வழங்குவது கடமை என நகர அபிவிருத்தி நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இரத்தலானையில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையில் புதிய கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகளை வியாழக்கிழமை (12) பிற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் அங்கு குழுமியிருந்த ஊழியர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளில் பிரதானமான தொன்றாக நீர் விநியோகம் காணப்படுகின்றது. ஆயினும், நாட்டின் பின்தங்கிய கிராமப் புறங்கள் பலவற்றில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான வழிவகைகள் இல்லாமை பாரிய குறைபாடாக இருந்து வருகின்றது. அவ்வாறான பிரதேசங்களை உள்ளடக்கி தூய நீரை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளோம். 

தூர பிரதேசங்களிலுள்ள பின் தங்கிய கிராமங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் போது ஆதாயமீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அதற்காக அவ்வாறான கிராமங்களை புறக்கணிக்க முடியாது. 

புதிய அரசாங்கத்தின் கீழ் நீர் விநியோகத்தை சீர்படுத்த தீர்மானித்துள்ளோம். குறிப்பாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படும் மக்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்கள் மீது எமது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு மாத காலமே கழிந்துள்ள நிலையில் நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. 

நீர் வழங்கள், வடிகாலமைப்பு சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நீர் வீணாக விரையமாவதை தடுப்பதற்கும் உரிய வழிவகைகளை கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கின்றது. 

நீர் விநியோகத்தை திறன்பட மேற்கொள்வதற்கு திறைசேரியோடு பேச்சுவார்த்தை நடாத்தி நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக பெறுவதற்கு முடியுமென நம்புகின்றேன். 

ஆசிய அபிவிருத்தி வங்கி, சவூதி அரேபியா அபிவிருத்தி நிதியம் என்பவற்றினதும், இந்தியா, சீனா போன்ற நாடுகளினதும் உதவியோடு றீர் வழங்கள் வடிகாலமைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டு. 

புதிய கட்டிடத்தை நீர்மாணிப்பதன் ஊடாக பாவணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைக் காண்பதற்கும் வசதியாக இருக்கும். அத்துடன் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உரிய பங்களிப்பை செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 

பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கடமையாற்றும் இந்தச் சபையை முன்னேற்றகரமான நிலைமைக்கு இட்டுச் செல்ல வேண்டியது என்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் என்றார். 

இந்நிகழ்வில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் கே. அலாவுதீன் அன்சார், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, பொது முகாமையாளர் ரஞ்ஜித் பாலசூரிய, பொறியியலாளர்களான உமர்லெப்பை, ரசீத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -