குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்: வெளிமாவட்ட மீனவர்கள் வருவதை இடை நிறுத்த கோரிக்கை

தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி, கும்புறுப்பிட்டி, சலப்பயாறு, இறக்கக்கண்டி, நிலாவெளி, ஜமாலியா மற்றும் திருகோணமலை போன்ற பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மூவினங்களை சேர்ந்த மீனவர்கள் திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை இடை மறித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் மீனவர்களை தடை செய்யக் கோரியே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாக இப் பிரச்சினை நடைபெற்று வந்ததோடு அப்பிரதேச மீனவர்கள் பல அசௌகரியங்களை அடைந்து வந்தனர் தொடர்ச்சியாக இந்நிலை நீடிக்குமானால் மீனவத்தொழிலில் ஈடுபடுவது ஒரு சவாலாகவே இருந்து வரும் என்ற நிலையை கருத்தில் கொண்டே மீனவர்கள் ஆர்ப்பாட்டர்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்கு வரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் எம்.ஜனார்த்தன் மீனவர்களின் கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டனர். 

இவ்விடயம் தொடர்பாக குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் விசேட கூட்டமொன்று குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது அக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவிப்பணிப்பாளர் அவர்களை உடனடியாக அழைத்து இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு பிரதி அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளரை வேண்டிக் கொண்டனர்.

அதற்கினங்க வெளிமாவட்ட மீனவர்கள் தொழில் நடவடிக்கை நிமிர்த்தம் தமது தொழில் இயந்திரங்களுடன் இரு வாரங்களுக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருவதை இடை நிறுத்துமாறும். 

ஏற்கெனவே வருகை தந்த மீனவர்களை வெளியேற்றுமாறும் பொலிஸாருக்கு மீன்பிடி உதவிப்பணிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -