பி.எம்.எம்.ஏ.காதர்-
மைஹோப் நிறுவனத்தின் ஆதரவுடனும்,மருதமுனை யூனிவேஸ்; விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடனும்,அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் 'மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சித்தீக் ஞாபகார்த்த அழைப்பு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி மெகாகிண்ணம்-2015' இதன் ஆரம்ப வைபவமும்,முதற் போட்டியும் இன்று (13-02-2015)மாலை மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
யூனிவேஸ்; விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,கணக்காளருமான தேசமாண்ய லயன் கே.எம்.றிஸ்வி யஹ்சர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மைஹோப் நிறுவனத்தின் ஸ்தாபகரும்,முகாமைத்துவப் பணிப்பாளருமான தேசமாண்ய, லயன்; சித்தீக் நதீர் கலந்து சிறப்பித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் விஷேட அதிதிகளாக மருதமுனை கிரிக்கட் சங்கத்தின் தலைவரும,; கல்முனை மாநகர சபை உருப்பினருமான ஏ.ஆர்.அமீர், யூனிவேஸ்; விளையாட்டுக் கழகத்தின் சுற்றுப் போட்டி ஆணையாளர் எம்.எம்.சக்கி, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவரும்,மத்தியஸ்தர் சங்கத்தின் தவிசாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன,; பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல்; மனாப், பிரதிப் பொதுச் செயலாளர். ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்) சுற்றுப் போட்டிக் குழுவின் தவிசாளர்; யூ.எல்.றமீஸ் மைஹோப் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர்; சித்தீக் நஜீம், ஆகியோருடன் கழகங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
முதற் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகமும், மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமும் பங்குபற்றியது இதில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கோல் அடிப்படையில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் பிரதம நடுவராக எம்.எம்.ஜப்ரான் கடமையாற்றினார். உதவி நடுவர்களாக எம்.எம்.றியாஸ். ஜே.பாதுசா, எம்.ஜே.றிபாக் ஆகியோருடன் போட்டி ஆணையாளராக எம்.எல்.எம்.ஜமால்தீன் ஜே.பி.கடமையாற்றினார். யூனிவேஸ்; விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியர் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
நொக்கவுட் அடிப்படையிலான இச் சுற்றுப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்;ட்,ஒலிம்பிக்,ஈஸ்டரன் யூத்,யூனிவர்ஸ், கல்முனை பிர்லியன்ட்,சனிமவுன்;ட்,லக்கி ஸ்டார்,சாய்ந்தமருது பிளைங்ஹோஸ்,மத்திய முகாம் அமீர் அலி ஆகிய ஒன்பது விளையாட்டக்கழகங்கள் பங்குபற்றுகின்றன.
இச் சுற்றுப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு ரூபா 30 ஆயிரம் பணப்பரிசும்,மெகாகிண்ணமும்,2ம் இடத்தைப்பெறும் அணிக்கு ரூபா 20 ஆயிரம் பணப்பரிசும்,கிண்ணமும் மேலும் சிறந்த வீரருக்கான பரிசும்,பார்வையாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும், யூனிவேஸ்; விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
