முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமானவரான அர்ஹம் உவைஸ் தலைமையிலான வக்பு சபை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்க வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் பரிபாலனம் செய்யும் அரச உயர் நிறுவனமாக வக்பு சபையின் சபை காணப்பட்டது. நீதவான் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்ட இந்த சபை, பேராசிரியர் ம.மு.உவைஸின் புதல்வாரான அர்ஹம் உவைஸ் தலைமையில் ரி.எச்.கரீம், மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, மௌலவி எம்.எஸ்.பஸ்றுல்லாஹ், எம்.இஸட்.எம்.பதியுதீன், சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் எம்.எம்.பஹீஜ் ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
இந்த நிலையில் வக்பு சபையின் தலைவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சபையினை கலைக்குமாறு பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த சபை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் கலைக்கப்படட்மை குறிப்பிடத்தக்கது.
இவருடைய காலப் பகுதியில் சுமார் 55க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வி-ல்
