அண்மையில் கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக் காரியாலயமான 'தாறுஸ்ஸலாம்' கேட்போர் கூட மண்டபத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 27 ஆண்டுகள் நிறைவு பெறுதை முன்னிட்டு நடைபெற்ற ஞாபகாரத்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் சட்டத்தரணி கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான மாண்புமிகு றஊப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கபூர் மேலும் கூறுகையில், 1980ம் ஆண்டு அரசியல் கட்சியாக ஆரம்பிக்கப்பட்டு கிழக்கிலங்கையில் தனது அரசியல் பணிகளை நாம் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் போது இதனை மேலும் விரிவுபடுத்தி நாடு பூராகவும் ஸ்திரப்படுத்தி விளம்பரப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்தை பெறுதற்கான சட்ட வரம்புகளுக்கமைவாக மீண்டும் இக்கட்சியை 1986ம் ஆண்டு கொழும்பில் அரசியல் கட்சியாக தலைநகருக்கு வந்து பிரகடனப்டுத்தினோம்.
அதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்ததன் பேரில் 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி இக்கட்சி இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு அதற்கான கடிதம் இக்கட்சியின் அன்றைய செயலாளர் என்ற வகையில் என் முகவரிக்கே அனுப்பிவைக்கப்பட்டிருந்தது என்ற தனது பழைய நீண்ட அரசியல் வரலாற்று அனுபவப் பின்னணியையும் மறைந்த தலைவர் அஷ;ரப் அனுபவித்த கஷ;ட நஷ;டங்களைப் பற்றியும் அவர் முகங்கொடுத்த சவால்களைப் பற்றியும் அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் மிகவும் ஏளனமாக பார்க்கப்பட்ட ஒருவராக இருந்த சம்பவங்களை விரிவாகவும் விளக்கமாகவும் சட்டத்தரணி கபூர் அவர்கள் எடுத்துரைத்தார்.
மறைந்த மாமனிதர் அவர்களின் மறைவுக்குப் பின்பு இக்கட்சியின் இன்றைய தலைவர் எமது மதிப்புக்குரிய அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் பல்வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில் பல சவால்களுக்கு மத்தியில் அன்றும் இன்றும் மிகவும் கட்சிதமாக
இக்கட்சியை வழிநடாத்திச் செல்லும் அவரின் நீண்ட கால வாழ்வுக்காவும் எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கு அவரின் தலைமைத்துவப் பண்புகள் உறுதுணை புரிய வேண்டுமென இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாகவும் வேண்டிக் கொண்டார்.
மேற்படி விழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் 'தாராளத்துவ கோட்பாட்டு விழுமியங்களும் முஸ்லிம்களும்' எனும் தலைப்பில் முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணிகளை முன்வைத்து தற்போதைய அரசியல் மாற்றங்களின் முக்கியத்துவம் பற்றியும் விபரமாக நீண்ட உரையாற்றினார். இவரின் மிகவும் கஷ;டமான பாண்டித்திய தொழியிலான ஆங்கில, சிங்கள் பேச்சினை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் இந்நாட்டின் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் அதனைத் தமிழில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மொழிபெயர்த்து பார்வையாளர்கின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் தமது தலைமை உரையில் இவ்விழாவின் முக்கியத்துவம் பற்றியும் ஆரம்பகால வரலாற்றுச் சம்பவங்களையும் மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்களுடன் தான் கொண்டிருந்த நீண்ட தொடர்புகளையும் மிக இரத்தினச் சுருக்கமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழமாகவும் அழகாகவும் எடுத்துரைத்தார். இக்கட்சி பதியப்படும் போது வழங்கப்பட்ட மரச்சின்னம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ;ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களின் நன்றியுடன் நிறைவு பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கட்சியின் சிரேஷ;ட பிரதித் தலைவர் அப்துல் மஜீட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம். அஸ்லம் உட்பட ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், இலக்கியவாதிகள், முன்னாள் இராஜ தந்திரிகள், ஊடகவியலாளர்கள், பிரபல்யமான பிரமுகர்கள் அரசியல்வாதிகள் என ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவின் நிகழ்ச்சிகளை இக்கட்சியின் உச்சபீட உறுப்பினரா சியாத் ஹமீத் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
.jpg)