இர்ஸாத் ஜமால் எம்.ஏ-
பொத்துவில் பிரதேம் முற்றுமுழுதாக பிரச்சினைகளால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதேசமாகும். நாங்கள் அரசியல் அனாதைகள், எங்களுடைய பிரச்சினைகளை உயர் மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வினை பெற்றுத்தருவதற்கு யாரும் கிடையாது.
தொண்டுதொட்டு நாமும் எமது பிரதேச மக்களும் ஸ்ரீ.மு.காங்கிரஸை ஆதரித்து, அக்கட்சியின் அபேட்சர்களுக்கு வாக்களித்து தலைமையின் முடிவுகளுக்கு முற்றுமழுதாக கட்டுப்பட்டவர்களாக கட்சியின் வெற்றிக்கு உழைத்து வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் கட்சியால் பெற்றதை பார்க்கும் போது உள்ளம் வலிக்கின்றது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இவையே எமது மக்களின் பிரதான பிரச்சினைகள். எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுதருவதற்கான முழுக்கடப்பாடு ஸ்ரீ.மு.காங்கிரஸிக்கு இருக்கின்றது.
எமது பிரதேச மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களை தொடர்ச்சியாக ஏமாற்ற நினைத்தால் அது முடியாத காரியம்.. பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வினை 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுத்தறுவதற்கு முடியாமல் போகுமாயின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சிக்கு சிவப்புக்கோடுகள் விழுவதை தடுக்க முடியாது.
பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் நிலவும் பிரச்சினைகள் பொடர்பாக ஆராயும் கூட்டம் தவிசாளர் எம்.எஸ் அப்பதுல் வாசித் தலைமையில் பிரதேச சபையின் கூட்டமண்டபத்தில் நேற்று (15) மாலை 4மணிக்கு நடைபெற்றது. அக்கூட்டத்திலே மேற்கண்டவாறு தவிசாளர் தெரிவித்தார்.
தவிசாளரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பின் பைசல் காசிம் அவகள் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுதறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும், சுகாதார இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி அவர்களை நேரில் வரவழைத்து வைத்திய சாலையின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)