இத்தொடர்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பலவற்றிலும் கடந்த வருட இறுதியில் வெளிவந்து இருந்தது. ஆனால் விஜயகலா பிரதி அமைச்சரான பிற்பாடு மீண்டும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
நாமல் ராஜபக்ஸவை நாடாளுமன்றத்தில் சந்தித்த விஜயகலா திருமண ஆசையை வெளிப்படுத்தி இருக்கின்றார். தெற்குக்கும் வடக்கும், சிங்களத்துக்கும் தமிழுக்கும் திருமணம் இடம்பெற வேண்டும் என்று கோரி இருக்கின்றார்.
நாமல் ராஜபக்ஸவை வடக்கில் உள்ள பெண்களுக்கு மிக நன்கு பிடிக்கும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றமைக்காக தமிழ் பெண் ஒருவரை நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்ய வேண்டும், நாமல் ராஜபக்ஸ தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்கின்ற பட்சத்தில் இனப் பிரச்சினை தீர்ந்து விடும், தேசிய நல்லிணக்கமும் ஏற்படும், அவ்வாறு ஒரு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள், நிறைவேற்றித் தர முடியும் என்று இவர் கேட்டு இருக்கின்றார்.
இப்போதைக்கு திருமணம் செய்கின்ற எண்ணம் கிடையாது, ஏராளம் பணிகளை செய்ய வேண்டி உள்ளது, இருந்தாலும் விரும்பினால் பெற்றோரிடம் மாப்பிள்ளை கேளுங்கள் என்று நாமல் ராஜபக்ஸ பதில் கூறி இருக்கின்றார்.
