பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சரீப் புறக்டர் லேனில் சுமார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவில் அல் குர்ஆனை ஓதி முடித்து காத்தான்குடி குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவின் தலைவர் ஏ.எல்.எம்.லத்திப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மஃஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன் (மதனி), காத்தான்குடி அந் நூர் குர்ஆன் மத்ரசாவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் சிறாஜ் (பலாஹி) உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் ,மத்ரசா நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவில் அல் குர்ஆனை ஓதி முடித்து குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு நிகழ்வின் சிறப்புரையை காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக் கல்லூரியின் உப அதிபர் மௌலவியா சில்மியா தாரிக் நிகழ்த்தினார்.
மேற்படி குர்ஆன் மத்ரசாவில் சுமார் 40 வருட காலமாக முஅல்லிமாக தொடர்ச்சியாக கடமையாற்றி வரும் மௌலவி எம்.எல்.ஏ.பதுர்தீன் ஆசிரியரும் தற்போது துணை முஅல்லிமாக கடமையாற்றி வரும் ஜனாபா ஜனுபாவும் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சுமார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இம் மத்ரசாவில் இம்முறை குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் 20 மாணவர்கள் தோற்றி 20 மாணவர்களும் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)