பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு-படங்கள்.




பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பிஸ்மி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது 'டெங்கு நோயும் அதன் பாதிப்புக்களும்' எனும்; தலைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை வைத்தியர் டாக்டர் எம்.எஸ்.எம்.நுஸைரும் 'காத்தான்குடியின் தற்போதய டெங்கு நிலவரமும் நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளும்' எனும்; தலைப்பில் காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீனும் இஸ்லாத்தின் பார்வையில் சுற்றுச் சூழல் சுகாதாரம் எனும்; தலைப்பில் அஷ்ஷெயக் எம்.ரீ.எம்.ஸப்ரி நளீமியும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இக் கருத்தரங்கில் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் மாணவர்கள்,ஆசிரியர்கள் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை,பிஸ்மி கிண்டர்கார்டன் மற்றும் பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை ஆகியவற்றின் பெற்றோர்கள் உட்பட பெரும் திரளான பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கருத்தரங்கு காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிஸ்மி குழுமத்தின் தஃவா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -