பி. முஹாஜிரீன்-
ஒலுவில் துறைமுகத்திற்கு நேற்று (14) சனிக்கிழமை விஜயம் செய்த கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளடங்கிய குழுவினர் துறைமுகத்தை பார்வையிட்டனர்.
திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம், துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் கலாநிதி பனாக்கொட மற்றும் உயர் அதிகாரிகளுடன் விஜயம் செய்த அமைச்சர் அர்ஜூண ரணதுங்க துறைமுகத்தை அபிவிருத்தி செய்து கப்பல்; போக்குவரத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் உரையாடினார்.
வர்த்தக துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தில் தற்போது மீன் பிடித்துறைமுகம் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒலுவில் துறைமுகம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு வணிக துறைமுகத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க இங்கு குறிப்பிட்டார்.
அத்துடன் ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள ஒலுவில் பிரதேச கடலரிப்பினையும் அமைச்சர் பார்வையிட்டார். மேலும், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் ஜாயிஷா வித்தியாலயத்திற்கு அரகில் உள்ள காணியை குறித்த பாடசாலை மைதானத்திற்கு இரு வார காலத்திற்குள் விடுவித்து பாடசாலை மைதானத்திற்கென வழங்குவதற்கு இங்கு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)