சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் முகமாக சட்டத்தரனி எச்.எம்.எம்.பாயீஸ் அதிரடி நடவடிக்கை

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் முகமாக கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளரும்,நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசகரும்,சுகாதார,சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரனி எச்.எம்.எம்.பாயீஸ் இன்று மூதூர் தள வைத்தியசாலைக்கும்,தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கும் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார்.

மூதூர் தள வைத்தியசாலையில் பல குறைபாடுகள் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்டன.

• 04 வைத்தியர்கள் உடனடியாக தேவை என்றும்
• வைத்தியர் குவாட்டஸ்
• தொழிலாளிகள் குறைவாக இருக்கின்றனர் பதிலாக புதியவர்கள் நியமனஞ் செய்து தரல்
• மருத்துவ மாது இளைப்பாறல் கட்டிடம்
• உத்தியோகத்தர்கள் குவாட்டஸ்
• தாதிகள் தேவை

தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள் வைத்தியரினால் முன்வைக்கப்பட்டன

• நீர் பவுசர் சாரதி நியமனம்
• தொழிலாளிகள் நியமனம்
• குடிநீர் இணைப்பு பெறுதல்
• பெண் வைத்தியர் ஒருவரை நியமித்தல்
• கொரிடோர் அமைத்தல்
• சுற்று மதில் அமைத்தல்
• புதிய வார்ட் கட்டிட தொகுதி அமைத்தல்

போன்ற பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டன இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை சுகாதார அமைச்சரிடம் பேசி நிறைவேற்றித் தருவதாக பாயீஸ் தெரிவித்தார்.இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி ஜே.எம்.லாஹீர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சரின் தோப்பூர் பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.றெசீட் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -