தோப்பூருக்கான தனியான உப-பஸ் டிப்போ அமைப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
தோப்பூர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் வேண்டுகோளிற்கினங்கவே இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கடந்த பல வருடங்களாக போக்குவரத்து பிரச்சினைக்கு மிகவும் அவதிப்பட்டு சொல்லொனாத் துயரங்களை அநுபவித்து வந்த இப் பிரதேச மக்கள் பெரிதும் இதன் மூலம் அன்றாட போக்குவாத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என நம்பப்படுகிறது.
அத்தோடு தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 25000க்கு மேற்பட்ட முஸ்லிம்,தமிழ்,மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் 100 நாள் வேளைத்திட்டத்தின் கீழ் இவ் உப.பஸ் டிப்போ அமையப் பெறவுள்ளதாக பிரதி அமைச்சரின் தோப்பூர் பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.றெசீட் குறிப்பிட்டார்.
.jpg)