ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
பல்வேறு இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்தின் திராய்க்கேணி மக்களுக்கு ஜேர்மன் 'நம்பிக்கை ஒளி உலக பசி ஒளிப்பு மன்றம்' ஆகியவற்றின் நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் 'உலக பசி ஒழிப்பு மன்றத்தின்' பணிப்பாளர் எம்.அகிலன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரி.சஹாதேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
'நம்பிக்கை ஒளி, உலக பசி ஒளிப்பு மன்றம்' ஆகியவை இணைந்து இலங்கையில் பல்வேறு அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளான 52 கிராம மக்களுக்கு உதவும் திட்டத்தின் கீழ் காரைதீவு, அட்டப்பள்ளம், திராய்க்கேணி ஆகிய கிராமங்களிலுள்ள வசதி குறைந்த பெற்றோரின் பிள்ளைகளின் கல்விக்கு உதவுதல், விசேட திறனுடையோர்க்கு உதவுதல், பெண்களைக் குடும்பத் தலைமைகளாகக் கொண்டு இயங்கும் குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற 382 குடும்பங்களுக்கு இதுவரை உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட 52 கிராமங்களில் திராய்க்கேணி 3வது கிராமமாகும். இன்னும் 49 கிராமங்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக உலக பசி ஒழிப்பு மன்றத்தின் பணிப்பாளர் எம்.அகிலன் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் கிராம மக்களினாலும், மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், கல்விப்பணிப்பாளர் வி.ரி.சஹாதேவராஜா ஆகியோர்களினாலும் பணிப்பாளர் அகிலன் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதோடு, 'அறவாழியர்கோன்' எனும் சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் 'நான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை.பணம் எனக்கு இறைவன் தந்துள்ள கொடை. நமது தேசியத் தலைவர்கள் காட்டித் தந்தவழியில் மக்களுக்குச் சேவை செய்யவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்துள்ளேன். எமது மக்களுக்குத் துன்பம் ஏற்படுகையில் எனது உயிரை மாய்த்தேனும் மக்களைக் காப்பாற்றுவேன்' எனத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)