இலங்கையில் செயற்பட்டு வரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் சம்மந்தமான சந்திப்பு


ஜே.எம்.வசீர்-

ஈரான் நாட்டின் கல்வி அமைச்சின் நிதி உதவியுடன் இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இலங்கையில் செயற்பட்டு வரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் கற்கைப் பீடம் கொள்ளுப்பிட்டியில் செயற்பட்டு வருகிறது. அதன் நோக்கமாக இலங்கையில் அரபு மொழி இஸ்லாமிய வங்கி முறைமை, இஸ்லாமிய சட்டம் என்பன தொடர்பான மேலதிக கல்வி மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே அதன் பிரதான நோக்கமாகும். 

அப்பல்கலைக்கழக வளாகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் செய்யது ஹமீட் றீஷா ஹகிகீ அவர்களுக்கும் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு அப்பலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்றது. 

இதன்போது இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழக வாய்ப்பினைப் பெறமுடியாது போன மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துவதும் கற்கை விரிவாக்கம் தொடர்பாக அதற்குத் தேவையான விடயங்கள் சம்பந்தமாகவும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு தமது கல்வித்தரத்தினை உயர்த்திக் கொள்வதற்காக பல நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -