பிரதி அமைச்சர் விஜயகலாவை கலாய்க்கும் ஈ.பி.டி.பி ஜெகன்மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியேற்றுவார் என்று சபதம் எடுத்து உள்ள மகளிர் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இக்கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி. கே. ஜெகன் பதிலடி கொடுத்து உள்ளார்.
இவர் நேற்று வரணி சன சமூக நிலைய புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து பேசியபோதே விஜயகலாவின் பெயரை நேரடியாக கூறாமலேயே பூடகமாக சாடினார்.
இவரின் பேச்சில் குறிப்பிட்ட பகுதி வருமாறு:-
அரசியல் நாகரிகம் தெரியாத சிலர் தற்போது தமிழர் அரசியலில் கிளம்பி வந்து எதை கதைப்பதென்றே தெரியாது பல கற்பனை கதைகளை கதைத்து வருகின்றனர். மக்கள் சேவை செய்யவென 100 நாள் திட்டத்தை அரசு கொண்டு வந்தள்ளதை எதற்கு பயன்படுத்துவது? என்று தெரியாது அரசியல் நடத்துகின்றனர்.
நாங்கள் வாய்ப் பேச்சுக்களை வைத்து போராடியவர்கள் அல்லர். களமுனைகளில் ஆயுதங்களை கொண்டு சமராடிய தலைவரையும், போராளிகளையும் கொண்டவர்கள். மக்களுக்கு உண்மையானவர்களாக சேவை செய்யும் அரசியல் போராளிகள் நாங்கள் என்பதை வரலாறு தெரியாத புதுவரவுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -