அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனைக்குடிக்கு தொடர்ச்சியான நீர் விநியோகத்தினை மேற்கொள்ளும் பொருட்டு நீர்த்தாங்கி ஒன்றினை அமைக்க தவறும் பட்சத்தில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றும் நகர அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கும் எதிராக பாரிய மக்கள் சக்தி இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்து அதனூடாக மக்கள் சக்திப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தப்போவதாக சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.
‘நாளைய கல்முனையும் நமது எதிர்கால சந்ததியும்' என்ற தனது கல்முனைக்கான அபிவிருத்தி மற்றும் புதிய தலைமைத்துவம் பற்றிய கருத்தரங்கு நேற்று (14-02-2015) கல்முனையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்ககையில் :-
கடந்த 2004ம் வருடம் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் பின்னர் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சுமார் 4500 குடும்பங்கள் வாழும் கல்முனைக்குடியிலுள்ள குடிநீர் கிணறுகள் யாவும் பாவனைக்குதவாதென அடையாளப்படத்தப்பட்ட பின்னரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எமது மக்கள் இந்த கிணற்று நீரையே குடிப்பதற்கும் தங்களது ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே எமது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கின்றது. தற்போது எமது பிரதேசத்தில் அதிக மக்கள் ஆதரவினை பெற்ற கட்சியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகின்றது.
அதன் தலைவரான றவூப் ஹக்கீம் அவர்களே தற்போதைய நீர்ப்பாசன அமைச்சராகவும் இருக்கின்ற நிலையில் எமது மக்களுக்கு சுத்தமாக குடிநீரை வழங்க நீர்த்தாங்கி ஒன்றினை அமைக்காமல் அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுக்க கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அரசு காலத்தில் இந்த நாடு பல்வேறு அபிவிருத்திகளை கண்டது. அந்த காலப்பகுதிகளையெல்லாம் விரையமாக கழித்து விட்டு, மக்கள் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசு எம்மை மக்களுக்கு வேலைசெய்ய முடியாமல் தடுக்கின்றது என்று தங்களது பலவீனங்களை கூறி ஆட்சியில் தொடரும் கேவலமான அரசியலை எமது பிரதேச அரசியல்வாதிகள் கைவிடவேண்டும்.
அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றிப் பெற்ற வாக்குகளை தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக மட்டும் பாவிக்கும் அரசியல்வாதிகள் அதற்காக வெட்கப்படவேண்டும். குறைந்தபட்சம் தமக்கு வாக்களித்த மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளையாவது தெரியாதவர்கள் உரிமை என்று எதைக்குறிப்பிடுகின்றனர்.
மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளைப் பெற்றுவிட்டு மக்களின் தேவைகளை தானும் செய்யாமல், செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுத்து எமது மக்களை வெறும் வாக்குப் போடும் இயந்திரங்களாகவும் அரசியல் கொத்தடிமைகளாகவும் பயன்படுத்தும் எமது அரசியல்வாதிகள் மக்கள் நலத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படவேண்டும்.
அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனைக்குடிக்கு தொடர்ச்சியான நீர் விநியோகத்தினை மேற்கொள்ளும் பொருட்டு நீர்த்தாங்கி ஒன்றினை அமைக்க தவறும் பட்சத்தில்;
கல்முனைக்கு சுத்தமான குடிநீரை வழங்க ஒரு நீர்த்தாங்கி அமைக்கப்படவேண்டும் மற்றும் பலவீனமான கல்முனையின் அரசியல் தலைமை அரசியலில் இருந்த ஒதுங்கி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற இரண்டு கேரிக்கைகளை முன்வைத்து கல்முனை நகரில் ஓர் உண்ணாவிரதப் பேராட்டம் ஒன்றை நடத்த தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)