சுதந்திர இலங்கையில் இன்று 66வது சுதந்திர தினம் தலைநகர் கொழும்புக்கு வெளியே கேகாலையில் கொண்டாடுகின்றது. இன்றைய நாளை நினைவுகூறும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரத்தின் முழுச்சுவாசத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய வைபவம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெறபோகின்றது.
இந்தச் சுதந்திரத்தைப் பெறுவதற்காக அன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் தியாகம் செய்யப்பட்டுள்ளதையும் இந்நாளில் நினைகூறவேண்டியது முக்கியமாகும். அகிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியவர்கள் இந்தியாவின் விடுதலைநோக்கிய பயணத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய வரலாறுகளின் பின்னணியில் இந்தியாவுக்கான சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுதந்திரத்தை வழங்கவேண்டிய சூழ்நிலைக்குள் பிரித்தானிய பேரரசு தள்ளப்பட்டிருந்தாலும், இதற்காக பாடுபட்ட மூவினத் தலைவர்களையும் இன்றைய நாளில் நினைவுகூறுவது கட்டாயமாகும்.
இலங்கைக்கு சுதந்திரமிக்க சுவாசக் காற்று வெறுமனே கேட்டவுடன் கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. எமது நாட்டு சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் 1505ஆம் ஆண்டில் தம்மை அடிமைப்படுத்த தலைப்பட்டனர். அன்றிலிருந்து வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது சின்னஞ்சிறு நாட்டை ஐரோப்பியர்கள் தத்தமது தேவைகருதி பயன்படுத்தி வந்திருந்தனர். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர். அதனால் ஒவ்வொரு சந்தர்ப்;பத்திலும் உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. முடிவுகளுக்கான பாதை வெகுதூரத்திலேயே இருந்தது.
தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள்; வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டினுள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பைக் காட்டியமையினால் 1948.02.04ஆந்திகதி எம்மை நாம் ஆளும் நிலைக்கு வந்தது. வளம் கொழித்த நாட்டை சீரழித்து வெறுமையுடன் ஒப்புவித்திருந்தனர். அந்நியர்கள் பிரித்தாளும் தந்திரத்தின் வெளிப்பாடாக சமயரீதியான குழப்பங்களுக்கு தூபமிட்டு இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர். ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை விளைவித்தனர். உதாரணமாக 1915ஆம் ஆண்டில் சிங்கள – முஸ்லீம் கலவரத்தைக் குறிப்பிடலாம். அன்றைய தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டதால் இக்கலவரம்; பின்னர் அடங்கிப்போனமை வரலாறாகும்.
அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது மார்க்கத்தை வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டு சமூகத்தின் கீர்த்திமிக்கத் தலைவர்களாக இருந்து கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது நடந்து கொண்டனர். மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக இவர்களே பின்நாளில் தலைவர்களாக உருவாக்கம் பெற்றனர். ஒன்றுபட்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடனும், அவர்களது தலமைகளுடன் சிறப்பான வழிகாட்டலுடனும் சிறுபாண்மைத் தலைமைகள் நல்லுறவு பூண்டிருந்ததை வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.
அதன் அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே ஊட்ட முற்பட்டு அதில்; வெற்றியும் கண்டனர். ஆங்கிலக்கல்வியின் மோகம் காரணமாக நாட்டுப்பற்றாளர்கள் குறைந்து கொண்டுவருகின்றனரோ என்கிற அச்சத்தின் மத்தியில் நாட்டுப்பற்றாளர்களை உருவாக்கும் நோக்குடன் கல்விரீதியான மதசார்பு கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கினர். அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வி ரீதியான மறுமலர்;ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி தான் சார்ந்த சமுதாயத்திற்கு உதவிசெய்தமை இன்றும் நினைவுகூறத் தக்கதாகும்.
மட்டுமன்றி தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் தம்பக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியதன் விளைவு இயங்கங்கள் வளர்ச்சி பெறலாயின. அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கரைகொண்டதன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு இவர்களின் பக்கத்துணையாக மத்தியதர வர்த்தினரின் ஆதரவு காணப்பட்டது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.
தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்த, இந்து, இஸ்லாமிய சமயரீதியான மறுமலர்;ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாய் அமைந்திருந்தன. அக்கால கட்டங்களில் பத்திரிகைகள் ஊடாக நாட்டின் விடுதலைக்கு வித்திடவும் காரணியாய் அமைந்திருந்தன. அந்தவகையில் 1864இல் லக்மினி கிரண, பஹண, அருனோதய, 1866இல் ஞானார்த்த பிரதீபய, 1880இல் சரசவி சந்தேஷய, 1902இல் சிங்கள ஜாதிய, 1888இல் இந்து சாதனம், 1909இல் தினமின, 1930இல் வீரகேசரி, 1931இல் தினகரன், அறிஞர் சித்திலெவ்பையின் முஸ்லீம் நேசன், ஞானதீபம் போன்ற பத்திரிகைகள் வெளியாகி தேசிய விடுதலைக்கு வழிவிடக் கோரிநின்றதையும் இதன்பின்னணியில் இயங்கிய மத்தியதர வர்க்கத்தினரையும் மறந்துவிடமுடியாது.
தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் கைக்கொள்ளத் தொடங்கின. தேசிய மது ஒழி;ப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டு சென்றனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் போராட்டத்தின் ஊடாக தேசியத்தலைவர்களாக மாற்றம் பெற்றுக் கொள்ளவும், பின்னர் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவையும் நல்கினர்.
தெளிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள முஸ்லீம் கலவரத்தை சாதகமாக திசைதிருப்ப முயன்று இறுதியில் நாட்டுப்பற்றுக்காகவும், விடுதலையை பெற்றேயாக வேண்டும் என்பதற்காக முறியடிக்கப்பட்ட வரலாற்றையம் இந்நாளில் நினைவுகூறல் முக்கியமாகும். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியல் பின்னணியில் பல முஸ்லீம் தலைவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். 'ஆங்கிலக் கல்வியானது சமயத்திற்கு முரணானது' என்கிற வாதம் அக்கால முஸ்லீம்கள் மத்தியில் வலுப்பெற்றபோது கல்வியின் மூலமாக சமுதாயம் உயர்வடைவதன் அவசியத்தை பல முஸ்லீம் தலைவர்களுடன் இணைந்து சட்டசபையிலும் வெளியிலும் கலாநிதி ரீபி. ஜாயா அவர்கள் செயல்திறனான பங்களிப்பை நல்கினார். 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'சிலோன் ரிவீவ்' என்கிற சஞ்சிகை வாயிலாக எழுதிய கடிதம் முஸ்லீம்களின் கல்விக்கு அவர்கொடுத்த ஒத்தடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. கொழும்பு சாஹிறாவின் அதிபராக இருந்து செய்த சேவைகளை இன்று முஸ்லீம் சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரும் மறக்காதுள்ளமை பெருமை தரும் விடயமாகும். இதன் மூலம் நாட்டுப்பற்றாளர்களும், தலைசிறந்த தலைவர்களும், கல்விமான்களும் உருவாகக் காரணமாக அமைந்திருந்தனர்.
சுதந்திரப் போராட்டத்தின் விளைவு அரசியல் சீர்திருத்தங்கள் பலவும் உருவாக்கப்பட ஏதுவாக அமைந்திருந்தன. 1921ஆம் ஆண்டின் 'மனிங் யாப்பு சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தத்தின் விளைவாக சர்வஜன வாக்களிப்பு உரிமை வழங்கப்படலாயிற்று. இவ்வாக்குரிமையின் பயன் இலங்கையின் சுதந்திரத்திற்;கான வழி மிக இலகுவாகத் திறக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏற்பட்ட அரச நிருவாகச் சிக்கல்கள்கள், அதிகாரத் தன்மை, அமைச்சு நியமனம், வாக்குரிமை போன்ற விடயங்கள் காரணமாக தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து போரட்டங்களை நடாத்தினர். இதன் விளைவு சோல்பரி பிரபு அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட 'சோல்பரி யாப்பு – 1947' இல் உருவாக்கப்பட்டு நாட்டின் சுதந்திரத்திற்கான கதவு திறக்கப்படும் நேரம் அண்மித்திருந்தன. 1947ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலின் பிரகாரம் முதலவாது பிரதமராக கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களும், ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலகவும் இலங்கையர்களாக அன்று நியமனம் பெற்றனர்.
இவ்வாறாக பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரம் கிடைத்ததன் பிற்பாடு இன்று ஏற்பட்டுள்ள மதரீதியான பிரிவுகள் அற்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 66ஆண்டுகாலம் சென்றுள்ளதை நாம் சிந்திக்கின்றோமா? அந்தச் சிந்தனை எம் அனைவருக்கும் முன்னே கேள்விகளால் துளைக்கின்றன. எம்மை விட்டுப்பிரிந்த மனிதத்துவம் இன்றைய நவயுகத்தில் தேடவேண்டியும் உள்ளது. இதனை இந்நாட்டு மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இன்றைய சுதந்திரத்திற்காக நம்முன்னோர்களது மன எழுச்சியினைக் கௌரவிக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டும். அந்த எழுச்சியின் வீர பரம்பரையில் மீண்டும் இனரீதியான பிளவுகளுக்குள் எம்மை தள்ளவும், பிரித்தாள நினைக்கின்ற அரசியல் சித்தாந்த வாதிகளின் சதிவலையில் வீழாது எமக்குள் காணப்படும் மனிதாபிமானத்தை வெளிக்காட்டி ஒன்றுமைமிக்க இலங்கையினைக் கட்டியெழுப்ப இன்றைய சுதந்திரமிக்க நன்நாளை நமதாக்கிக்கொள்வோம்.
(அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்)

0 comments :
Post a Comment