குறுகலவில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்வோம்-சிஹல ராவய!

லாங்கொட குருகல பகுதியின் 52 ஏக்கர் காணியில் வசிக்கும் சட்டவிரோத முஸ்லிம் குடியேற்றக்காரர்களை அகற்றாது போனால், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக சிஹல ராவய அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

சிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களை முன்னைய அரசாங்கம் அகற்றியிருந்தது. 

எனினும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அவர்களை குடியேற அனுமதித்திருக்கிறது.

இந்தநிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினையை தமது கைக்குள் கொண்டு வரப்போவதாக தேரர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துக்குள் இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குருகல பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம்களே சட்டவிரோத குடியேறிகள் என்று சிஹல ராவய குறிப்பிட்டுள்ளது.
pt.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -