எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை போக்குவரத்துசாலைக்கு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டு ஒரு பூரண போக்குவரத்துசாலையாக மாற்றியமைத்தல் அத்துடன் நவீன வசதியுடன் கூடிய பஸ் தரிப்பிடம், மற்றும் கல்லரிச்சல் வீதி செப்பனிடப்பட்டு அதற்கான வடிகாலமைப்பை ஏற்படுத்துதல், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை பொதுவான நோக்கின் அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளேன்.
இவ்வாறு மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மாதாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் சம்மாந்துறை விளினியடி அறபா வித்தியாலத்தற்கு அருகில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.அறூஸ், தொழிலதிபர் ஏ.எம்.வசீர் ஹாஜியார், அமைப்பின் பிரநிதிகள், உறுப்பினர்கள், புத்தஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இவ் அமைப்பு சுயநலத்திற்கான அமைப்பாக இல்லாமல் பொது நலத்தினை கருத்தில் கொண்டு எமது ஊரின் தேவைகளை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் நமது சமூகத்தின் விடியலுக்காக பாடுபடுகின்ற அமைப்பாகவே இதனை நான் கருதுகின்றேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சம்மாந்துறை மக்களின் பூர்வீக இடமான பழைய சந்தை பகுதியினை சனநடமாற்றம் கூடியதாக பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டும். சம்மாந்துறை போக்குவரத்து சாலையின் வேலைத்தளம் தற்போது அமைந்துள்ள இடமானது பழைய சந்தையாகும்
அதனை மீண்டும் பிரதேச சபையிடம் ஒப்படைத்து சந்தை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் அப்போது தான் இந்த பிரதேசத்தின் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு புதிய அரசாங்கத்தினால் அதிகாரங்களும், அதிகாரமிக்க அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக என்னால் முடிந்த பணிகளை செய்ய தயராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)