உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இது குறித்து அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹசீமுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் க்ஷனிகா ஹிரிபுரேகமவை இராஜினாமா செய்யுமாறு சில தரப்பினர் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக ரஜீவ விஜேசிங்க அதிருப்தியடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் இது பற்றி அறிந்து கொள்ள ரஜீவ விஜேசிங்கவை நாம் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.
இதேவேளை அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
