சம்மாந்துறை பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய பேரவையின் சாகித்திய கலாசார பெருவிழா!

அபூ-இன்ஷாப்-

ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய பேரவையினால் 2014 ஆண்டுக்காக எற்பாடு செய்யப்பட்ட பிரதேச சாகித்திய கலாசார பெருவிழா நேற்று (12) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடை பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய பேரவையின் தலைவர் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதீதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் அஷ;-nஷய்க் எம்.ஐ.அமீர் கலந்த கொண்டார்.

கௌரவ அதீதிகளாக அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹன்சார், இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.எம்.நௌஷhட் உட்பட கல்வி மான்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச சாகித்திய கலாசார பெருவிழாவின் போது கலாபூசனம் விருது பெற்ற 07 பேர், சாகித்திய கலாசார கனிஷ;ட மற்றும் சிரேஷ;ட பிரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 52 பேர், ஜீ.சீ.ஈ சாதாரண தரத்தில் அதிவிஷேட திறமை பெற்ற 08 பெரும், கா.பொ.த உயர்தரத்தில் சிறப்புச் சித்தி பெற்ற 83 பேர் அடங்கலாக 150 விருதுகள் மற்றும் பரிசில்கள், பொன்னாடைகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விஷேடமாக பட்டறை எனும் சுமார் 100 பக்கங்களை கொண்ட சாகித்திய சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -