நிந்தவூர் நெனசல அறிவகம், சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பொலிசாருடன் இணைந்து நடாத்திய வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான ஆலோசனையும், முறையான பயிற்சியுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் நிகழ்வும் இன்று (14) நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யன்க் அமைப்பின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நெனசல அறிவகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.புஹாது, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் சாஜன் எம்.ரி.எம். நஜீம், போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.அப்துல் றசூல், சாரதிப் பயிற்சி போதனாசிரியர் யு.எம்.உவைஸ் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் பெற ஆவலுடையோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பொலிசாரினால் விளக்கவுரைகளும், முறையான பயிற்சியுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)