ஐ நா மனித உரிமைக் கவுன்சிலின் முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசு இந்த விடயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து, விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விடயங்களை விசாரணைக் குழுவின் முன்னர் வைக்கவும் வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த காலகட்டத்தில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
