நேற்று திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை இடை மறித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி, கும்புறுப்பிட்டி, சலப்பயாறு, இறக்கக்கண்டி, நிலாவெளி, ஜமாலியா, திருகோணமலை போன்ற பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மூவினங்களை சேர்ந்த மீனவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் மீனவர்களை தடை செய்யக் கோரியே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது அவ்விடத்திற்கு போக்கு வரத்து பிரதி அமைச்சர் கௌரவ எம்.எஸ்.தௌபீக், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம்.அன்வர் மற்றும் எம்.ஜனார்த்தன் ஆகியோர் வருகை தந்து மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவிப்பணிப்பாளர் அவர்களை உடனடியாக அழைத்து இதற்கான தீர்வை பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு மீண்டும் பிற்பகல் 03 மணிக்கு கூட்டம் ஒத்திவைக் கப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 03மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம்.அன்வர் மற்றும் எம்.ஜனார்த்தன் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ ஆசிக், சல்மான், திருமலை மாவட்ட மீன் பிடி உதவிப்பணிப்பாளர,; குச்சவெளி, புல்மோட்டைபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இதன் போது வெளிமாவட்ட மீனவர்கள் தொடர்பாக பல கருத்துக்கள் ஆராயப்பபட்டது. மேலும் தொழில் நடவடிக்கை நிமிர்த்தம் தமது தொழில் இயந்திரங்களுடன் வெளிமாவட்ட மீனவர்கள் வருகை தருவது தொடர்பில் தான் எந்தவிதமான அனுமதியும் என்னால் வழங்கப்படவில்லை எனவும் மேலும் இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீன்பிடிப்பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் இதற்காக இரு வாரங்களுக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருவதை இடை நிறுத்துமாறும் ஏற்கெனவே வருகை தந்த மீனவர்களை வெளியேற்றுமாறும் பொலிஸாருக்கு மீன்பிடி உதவிப்பணிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஊடகப் பிரிவு-
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)