அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் உள்ள 160 தேர்தல் தொகுதியிலும் ஒரு தொகுதிக்கு 300 வீடுகள் என்ற அடிப்படையில் கிராமிங்களில் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு ஒர் இலட்சம் ருபாவை 3.5வட்டிக்கு கடன் அடிப்படையில் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்த்தினை நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்படும்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்காக 5000 மில்லியன் ருபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 1 இலட்சம் ருபாவுக்கு வீடு நிர்மாணித்து 5இலட்சத்து 75ஆயிரம் பெறுமதி வாய்ந்த வீடு நிர்மாணிக்கப்படும்.
இலங்கையில் வீடற்ற குடும்பங்கள் 2 இலட்சம் பேர் உள்ளனர். இக்குடும்பங்களுக்கு அவசரமாக வீடுகள் நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையாகும். என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று வீடமைப்ப அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் விமலசிரி பெரேரா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரியவும் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வின் போது வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டிட நிர்மாண சங்கத்தினர் இத் திட்டத்திற்காக 50 இலட்சம் ருபா நிதியையும் அன்பளிப்புச் செய்தனர்.கொழும்பு நகரில் வீடுகள் அமைக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி நீர்வழங்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடமே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனக்கு கொழும்பில் வீடுகள் அமைப்பதற்கு எனது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதியோ அதற்குரிய காணிகளும் கொழும்பில் இல்லை.
கடந்த காலத்தில் கொழும்பில் வாழும் சேரிப்புற மக்களுக்கு 60ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையே நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனவும் அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
வட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்படட பிரதேசங்களில் மற்றும் மலையகப்பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் 25ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதற்காக மலையகப் அபிவிருத்தி சம்பந்தமான அமைச்சர் திகாம்பரம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபை தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகின்றது.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் கடந்த காலத்தில் இந்த நாட்டில் 1இலட்சம் வீடமைப்புத்திட்டம், 10 இலட்சம் வீடமைப்புத்திட்டம் 15 இலட்சம் ;வீடமைப்புத்திட்டத்தினை ஆரம்பித்து வெற்றி கண்டார். அதே போன்று நானும் இத்திட்டத்தினை முன்னேடுப்பேன். கடந்த காலங்களில் இந்த நாட்டில் வீடுகள் அமைக்கும் திட்டம் கடன் வழங்கும் முறைகள் சட்ட விரோதமாகவும் தனது கட்சி ஆதரவாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நான் ஒரு சமமான முறையில் சகல பிரதேசங்களுக்கும் 300 வீடுகள் என்ற அடிப்படையில் ஆரம்பித்துள்ளேன்.
இவ் வீடுகள் தொகை கணக்கில் இலாபமான முறையில் கட்டிடப்பொருட்கள் வழங்கப்படும்.ஆகவே சில அரசியல்வாதிகள் எனது இந்த திட்த்தினை அறிமுகப்படுத்தியதும் 1 இலட்சம் ருபாவுக்கு எப்படி வீடு கட்டுவது அதற்கு எங்கிருந்து நிதி கிடைத்தது என விமோசனம் செய்கின்றனர்.
ஆனால் இதனை நடைமுறைப்படுத்தி எனக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிறை உதவிகள் கிடைக்கின்றன. ஜரோப்பிய யூனியன், ஜக்கிய நர்டுகள் ஹபிட்டாட் வீடமைப்புத்திட்டம் போன்ற நிறுவணங்கள் எமது வீடமைப்புத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)