சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் வெற்றி!

எஸ்.அஷ்ரப்கான்-

சாய்ந்தமருது முன்னணி கழகமான ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனையின்முன்னனிக் கழகங்களில் ஒன்றான சீ ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே இடம்பெற்ற 25 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக்கொண்டது.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சீ ஸ்டார் விளையாட்டு கழகம் முதலில் ஏஜ் ஸ்டீல்விளையாட்டுக் கழகத்தை துடுப்பெடுத்தாட பணித்ததற்கமைவாக ஆடுகளம் நுழைந்த ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக்கழகம் நிர்ணயிக்கப்பட்ட 25 பந்து வீச்சு ஒவர்களை எதிர்கொண்டு 7விக்கட்டுக்களை இழந்து 178 ஒட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதில் ஸியாம் 47 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் சீ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பைஸால் 5 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 22.1 பந்து வீச்சிப் பிரதிகளைஎதிர் கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 120 ஒட்டங்களை மாத்திரம் பெற்றுதொல்வியை தளுவியது. இப்போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 59ஒட்டங்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் விசேட அம்சம் கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏஜ் ஸ்டீல்விளையாட்டுக் கழகத்தின் பிரதிச் செயலாளரும், ஆசிரியருமான அஷ்ரப்கான் இப்போட்டியில்புதிய வீரராக அறிமுகம் செய்யப்பட்டார். 

இவர் தனது முதலாவது போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியதுடன், ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் இப்போட்டியில் வெற்றியையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -