ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அம்பாரை, காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய மகா சிவராத்திரி நான்கு சாமப் பூஜைகள் 18.02.2015 மாலை 6.30 மணி தொடக்கம்18.02.2015 அதிகாலை 5.30 மணி வரை மிகச் சிறப்பாக இடம் பெற்றன.
ஆலயத் தலைவர் எம்.புஸ்பநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் மாவடி கந்தசுவாமி ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சாந்த ரூப குருக்கள் நான்குசாமப்பூஜை வழிபாடுகளை முன்னின்று நடாத்தி வைத்தார்.
இதே வேளை காரைதீவு சக்தி கலாமன்றத்தினரின் 'நல்ல தங்காள்' நாடகம் அரங்கேற்றப்பட்டதோடு, பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இம்முறை பக்த அடியார்கள் முன்னர் ஒரு போதுமில்லாதவாறு ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை ஒரு விசேட அம்சமாகக் கருதப்படுகிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)