அம்பாறை தமண பகுதியில் பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அமப்பினால் குடிநீர் வழங்கல்





பி. முஹாஜிரீன்-

ம்பாறை தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குநார கிராமத்தில் பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா (ஜெஸ்கா) நிறுவனத்தினால் புதிதாக ரூபா 02 இலட்சம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் கிணறு இன்று (18) புதன்கிழமை மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இப்பிரதேச மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்குடிநீர்க் கிணறு மூலம் 50 குடு;பங்கள் நன்மையடையவுள்ளன.

புதிய குடிநீர் கிணற்றிணை பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம் ஹாஸீம் மதனி (சூரி), தமண தரி தர்மராஜ விகாரதிபதி கோமந்த கிமி ஆகியோர் கலந்து கொண்டு வைபவரீதியாக மக்களிடம் கையளித்தனர்.

இக்குடிநீர் நிர்மாணிக்கப்பட்டமைக்காக பொது மக்கள் ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா (ஜெஸ்கா) நிறுவனத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -