தம்மிடம் இரண்டு கைக்கடிகாரங்கள் மட்டுமே இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் அதிக பெறுமதி வாய்ந்த பல கைக்கடிகாரங்கள் காணப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஊடகத் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதனைப் போன்று தம்மிடம் பல்வேறு கைக்கடிகாரங்கள் கிடையாது எனவும், இரண்டே இரண்டு கைக்கடிகாரங்கள் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு கைக்கடிகாரங்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் பரிசாக அளிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளாகவே தாம் கைக்கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்ததிலில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட அனைத்து படங்களும் போலியானவை எனவும் இதனை விடவும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட படங்கள்
குறிப்பிட்ட படங்கள்

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)