அல்-அஸ்ஹர் பாலர் விடுகை விழாவும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும்- ஹசன் அலி எம்.பி பிரதம அதிதி

ஏ.ஆர்.றிப்கா றபீக்

நிந்தவூர் மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஆதரவில் இயங்கி வரும் அல்-அஸ்ஹர் பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் 25 ஆண்டு பூர்த்தியை (வெள்ளி விழாவை) முன்னிட்டு நடைபெற்ற பாலர் விடுகை விழாவும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் நேற்று நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

நிந்தவூர் மனித நலன்புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவரும், பாலர் பாடசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான ஏ.எல்.தவம்  கௌரவ அதிதியாகவும், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளான ஏ.உதுமாலெப்பை, எம்.ஏ.ஏ.வசீர்டீன், எம்.என்.எம்.றிபாஸ், நிந்தவூர் பிரதேச முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.அமீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஹமீட், நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய உதவி அதிபர் திருமதி.உம்மு ஜெமீலா அப்தல் ஜப்பார் ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி அவர்களின் அரசியல் ஞானம், தூரதிருஷ்டியான சிந்தனை, சமூக அக்கரை, சகோதர இனத்தவருடனான புரிந்துணர்வு( சகோதர வாஞ்சை ), பிறருக்கு உதவும் பரோபகாரம், பரந்தஅறிவு, நற்குணங்கள், மனிதப்பண்புகள் போன்றவற்றை மதிப்பீட்டு செய்து, ' பொன்மனச் செம்மல் '  எனும்  சிறப்புப் பட்டம் சூட்டி, பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான ஏ.எல்.தவம் அவர்களின் இளமைத் துடிப்புடன் கூடிய துணிச்சல், பலமான எதிரிகளுக்கு மத்தியில் அரசியல் காய்நகர்த்தல் பாங்கு, அறிவுக் கூர்மை, வசிகரத் தன்மை, மக்களை ஈர்க்கும் வசிகரப் பேச்சு, எல்லோரையும் கவரும் பணிவு, இளைஞர்களைத் தாங்கும் தலைமைத்துவப் பண்பு போன்ற பல விடயங்கள் அவதானிக்கப்பட்டு, 'புரட்சித்திலகம்' எனும் சிறப்புப் பட்டம் சூட்டி, பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

மனித நலன்புரி சமூகசேவைகள் ஒன்றியம் நடாத்திவரும் பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களில் சுமார் 25 வருடங்களாக தொண்டராகவும், மிக மிகக் குறைந்த சம்பளத்திலும் சேவையாற்றி வரும் திருமதி.எஸ்.முனீறா( பாலர் ஆசிரியரும், பராமரிப்பாளரும்) வின் அருஞ் சேவையைப் பாராட்டி, 'தியாகத் தீபம்' எனும் சிறப்புப்பட்டம் வழங்கி, பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் பாலர்களின் கண்கவர் கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில்  இடம் பெற்றன. இறுதியில் இப்பாலர்களுக்குச் சான்றிதழ்களும், பெறுமதி வாய்ந்த புத்தகப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -