ஸிறாஜ் ஏ.மனீஹா-
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் பாலமுனை பிரதான வீதிக்கு (அரசயடிச் சந்தி) அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை(02)ஆம் திகதி பி.ப.4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஊப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதே வேளை பாலமுனை தேசிய காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ ஆதரித்து நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நாளை சனிக்கிழமை(3) பாலமுனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார காரியாலயத்திற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
பாலமுனை தேசிய காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டதிற்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எஸ்.உதுமாலெவ்வை உட்பட அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
