நேற்று வியாழக் கிழமை மாலை (01.01.2014) திகாரியில் பொது வேட்பாளர் மைத்திரி பாலவின் வெற்றியை பலப்படுத்தும் முகமாக இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் மேல் மாகான சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட பொதுமக்கள் முன்னால் பாரளமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜி பற்றி பேசுமாறு கேட்க, அதற்கு முஜிபுர் ரஹ்மான் அஸ்வர் ஹாஜியை பற்றி உரையாற்றுவதற்கு அவர் ஒரு பெயர் சொல்லக் கூடிய மணிதர் அல்ல என்றும், அவரைப்பற்றி கதைத்து எனது பெறுமதிமிக்க நேரத்தினை வீனடிக்க விரும்பவில்லை என்றும், நாங்கள் தாள்கூட்டத்தினை வைத்து ஏதாவது ஒரு விளையாட்டினை விளையாடும் போது அதிலிருக்கும் ஜோக்கர் எனும் இரண்டு தாள்களையும் புறம் தள்ளி விட்டே விளையாடுக்கின்றோம் அதைப் போலவே நான் அஸ்வர் ஹாஜியையும் முஸ்லிம்களின் இந்த அரசியல் விளையாட்டில் புறம்தள்ளி வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு மக்கள் அலையாக திறண்டு வந்திருந்தமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன் பலத்த கரகோசங்களும் நிரைந்த கூட்டமாக இருந்தது.
இக்கூட்டத்துக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னால் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம், பாரளமன்ற உறுப்பினரும் கடுவள தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்ட்ச்சியின் அமைப்பாளருமான சுஜீவ சேனசிங்க, மேல் மாகான சபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான, ஹர்சன ராஜகருனா, மத்திய மாகான சபை உறுப்பினர் அசாத் சாலிஹ், வடமாகான சபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் ஆகியோர்கள் நான் இந்த செய்தி சேகரிக்கும் நேரம் வரைக்கும் கலந்து கொண்டதுடன் அதற்கு பிற்பாடு முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், பாரளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாற்ற இருந்தனர்.
இங்கு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம்., இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முடிவினை ஏற்கனவே எடுத்து விட்டார்கள்.
ஆகையால் இந்த அரசாங்கத்தின் அடாவடி தனங்களையும் , முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தின் துணையோடு இளைக்கப்பட்ட கொடுமைகளையும் மேடைகளில் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை என கூறியதோடு, அவ்வாறு முஸ்லிம்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளை அசைப் போட்டவாறு அரசாங்கத்தினை தாறுமாறாக மேடைகளில் விமர்சிப்பதினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவு குறைவடைந்து விடும் எர்னக் கூறினார்.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய மேல் மாகான சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி.. பேறுவளை தர்க்கா டவுன் பிரச்சனைகளின் எதிரொலிகளை பற்றி உணர்ச்சி பூர்வமாக சொன்னதுடன்.
இத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஏன் ஓட்டு மொத்தமாக மைத்திரிபாலவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும், ஒரு வாக்காக இருப்பினும் அதன் பெறுமதி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் விளாவாரியாக உரையாற்றினார்..
.jpg)
.jpg)