அரசு பிடிவாத போக்கிலிருந்து இறங்கி வந்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்கின்றது-SLMC

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று இன்னமும் இறுதி முடிவை மேற்கொள்ளவில்லை.

அரசாங்கம் தனது பிடிவாத போக்கிலிருந்து இறங்கி வந்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்கின்ற நிலையில், நிபந்தனையின்றி, சுயமரியாதை இழந்து ஆதரவு வழங்கலாமா என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் எழுகின்றது. 

எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் ஊடாக முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டி எழுப்பலாம் என்று அரசாங்கம் கருதுகின்றது.

இதற்கு மத்தியில் களநிலவரம் எமது மக்களின் மன உணர்வுகள் என்பவற்றையும், நாம் மதித்து அவற்றை சீர் தூக்கி பார்க்க வேண்டும். 

அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம் முக்கியமானது. அதனையாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடளாவியரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இன்றைய முக்கிய கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். இக்கூட்டம் கண்டி, கெட்டம்பே ஓக்ரே மண்டபத்தில் இடம்பெறுகிறது.

(முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப்பிரிவு



உங்கள் நண்பர்களுக்கும் செய்திகளை பகிர---->
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -