ஜனாதிபதிக்கான துஆ பிரார்தனையில் அக்கரைப்பற்று MC உறுப்பினர் கலந்துகொள்ளாமை காரணம்!!

அவதானி-
முப்பது வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் வாழும் மூவின மக்களும் நிம்மதியாக வாழ வழி வகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது முறையும் ஜனாதிபதியாக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர மேயர் அதா உல்லா அஹமட் ஸக்கி தலைமையில் துஆ பிரார்த்தனை அதாஉல்லாஹ் அரங்கில் இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்ட நிலையில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் இருவரும் பிரதி முதல்வரும் கலந்து கொள்ளவில்லை என அவதானி கருத்து வெளியிட்டுள்ளார். சிலதினங்களுக்கு முன்னர் இம்போட்மிரர் இணையத்தில் வெளியான அமைச்சர் அதாஉல்லாவின் கோட்டைக்குள் விளப்போகும் ஓட்டை என்னும் தலைப்பில் இடம்பெற்ற செய்திக்கும் இன்றைய நிகழ்வுக்கும் சம்மந்தம் இருப்பதாக அவதானியின் கருத்து தெரிவிக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரின் பக்கம் சிலர் பிரிந்து சென்றுகொண்டிருப்பதால், தானும்  பிரிந்து சென்று அக்கரைப்பற்றுக்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் அதாஉல்லாஹ்வின்  வலது கையாக இருக்கின்ற ஒருவர் மைத்திரிபாலவுடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய துஆ பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளாத மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.எம்.சபீஸ், மற்றும் நிலாம் ஆகியோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதனை அறிந்து கொள்ள இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு முயற்ச்சி செய்தும் பயணளிக்க வில்லை.

ஆனாலும் அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் ஒருவரும் அவரது சகாவும் மைத்திரி பக்கம் சென்று அனுகூலங்களைப்பெற்று அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதும் அவதானியின் அவதானிப்பாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :