ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் தலைமையில் துஆப் பிரார்த்தனை.





நிஸ்மி, அக்கரைப்பற்று-

முப்பது வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் வாழும் மூவின மக்களும் நிம்மதியாக வாழ வழி வகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது முறையும் ஜனாதிபதியாக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர மேயர் அதா உல்லா அஹமட் ஸக்கி தெரிவித்தார். ;

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களின் தலைமையில்; ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக பிரார்த்திப்போம் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற துஆப் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அக்கரைப்பற்று மாநகர மேயர் அதா உல்லா அஹமட் ஸக்கி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மேயர் தனதுரையில்: 

மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தித் தந்ததோடு, எமது பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தக் காரணமாக இருந்த எமது ஜனாதிபதியின் வெற்றிக்கு எமது பிரதேச மக்கள் உட்பட சிறுபான்மை சமுகத்தினர் அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறவேண்டி மௌலவி ஐ.எல்.அப்துல் றஸீட் அவர்களினால் துஆப்பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. 

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்.உவைஸ், பிரதேசசபை உபதவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம், மாநகர சபை உறுப்பினர்களான என்.எம்.நஜுமுதீன், ஏ.எல்.ஜுனைதீன்,கே.எல்.சறூக், பிரதேச சபை உறுப்பினர்கள், அனைத்துப் பள்ளி வாயல் தலைவர் ஏ.எல்.அப்துல் றஸீட், அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி,பள்ளிக்குடியிருப்பு, பட்டியடிப்பிட்டி உள்ளிட்ட பள்ளிவாயல்களின் தலைவர்கள், அக்கரைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், உள்ளுர் சமுக மட்டத் தலைவர்கள், சமுக சேவையாளர்கள். பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :