ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் :ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானம்!

னவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கலைக்கப்படும்.

தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதன்படி பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் கலைக்கப்படுமென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதென்றால் ஐந்து வருட காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும். இந்த ஐந்து வருடங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் பூர்த்தியடைகின்றது.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தற்போதுள்ள பாராளுமன்றத்தை சட்டவாக்க சபையாக மாற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உட்பட அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இதன்படி அவர் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லையென்பது உறுதியாகின்றது எனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -