சக்தியின் தரமற்ற மின்னல் நிகழ்சி வெட்கப்படவேண்டிய அசிங்கம்- சட்டத்தரணி துல்ஷான்

க்தி தொலைகாட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவினால் தொகுத்து வழங்கப்படும் மின்னல் நிகழ்ச்சி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளை இழிவு படுத்தி கேவலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் பல தரப்பட்ட வர்கத்தினரையும் வேதனைப்படுத்துவதாகவே நாம் உணர்கிறோம் இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.எனத் தெரித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம் (துல்சான்) வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவுது :- 

இந்தநிகழ்ச்சியானது அரசியல் சார்ந்த ஒரு நேரடி நிகழ்ச்சியாக இருந்த போதிலும் இதனைத்தொகுத்து வழங்குகின்ற ரங்கா என்பவர் தனது சுய விளம்பரத்திற்காகவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவேண்டும் என்பதற்காகவும் சில முஸ்லிம் அரச தலைமைத்துவங்களின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து அவர்களின் அந்தரங்க வாழ்கையை அலசி ஆராய்ந்து அவர்கள் செய்யாதஇ ஆதாரமில்லாத சில குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் மீது சுமத்தி அந்த அரசியல் தலைவர்களையும் அவர்கள் சார்ந்த கட்சியையும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து மக்களினால் வெறுத்து ஒதுக்குவதற்கு முனைகின்றார். 

அந்த அடிப்படையிலேயே கடந்த சில வாரங்களாக முஸ்லிம் சமூகத்தில் இன்று மாபெரும் சக்தியாக எழுச்சி பெற்று விளங்குகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை தனிப்பட்ட வகையில் விமர்சித்து அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் என்பவரையும் மின்னல் நிகழ்ச்சி மூலமாக கலந்து கொள்ள செய்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஒருபக்க சார்பான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் வாரி இறைத்து வசைபாடுவதையும் அவமானப்படுத்தி கேவலப்படுத்துவதையும் இந்தநிகழ்ச்சியில் காண்கின்றோம்.

இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்பதுடன் மீடியா சுதந்திரம் என்ற பெயரில் மீடியாவுக்குரிய ஒழுக்க விழுமியங்களுக்கு அப்பால் இந்தநிகழ்ச்சி திட்டமிட்டு ஒரு அரசியல் தலைமைத்துவத்தின்மீது சேறு பூச முற்படுகின்றது என்பதையும் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டியுள்ளது. எனவே முஸ்லிம் சமூகம் சக்தி டீவியின் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு ரிஷாத் பதியுதீன் மீது குற்றங்களை சுமத்தி திட்டமிட்டு அவரை கேவலப்படுத்துவதன் மூலம் ரங்கா எதனை சாதிக்க நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது. இது ஜனாதிபதி தேர்தல் காலம் ஆகையால் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செல்வாக்கை வடகிழக்கு முஸ்லிம்களின் மத்தியில் இழக்கச்செய்து முஸ்லிம்களின் அரசியல் களத்தில் ரிஷாத் பதியுதீனை கேவலப்படுத்தி ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளில் சக்தி டீவியின் மின்னல் நிகழ்ச்சியில் ரங்காவின் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம். மின்னல் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் சக்தி டீவியின் நாளாந்த செய்தி அறிக்கையிலும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தினமும் பல விடயங்களை கூறுகின்றார்கள்.

அதில் ஒன்று இந்த விடயம் தொடர்பாக ரிஷாத் பதியுதீனை விமர்சித்து இணையத்தளத்தின் (iவெநசநெவ) முகநூளில் (கயஉநடிழழம) கருத்து கூறுபவர்களின் விமர்சனங்களை தொகுத்துஇ முக்கிய செய்திகளாக காட்டுகிறார்கள். இந்த சிறுபிள்ளைதனமான செயல் சக்தி டீவியின் தரம் தாழ்ந்து போனதையே எமக்கு புரியவைத்துள்ளது. முகநூலில் கருத்துரை செய்பவர்கள் தனது சொந்த பெயர்களில் செய்வதுமில்லை அவர்கள் சமூக நலன் சார்ந்த புத்தி ஜீவிகளும் இல்லை. அதில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்கிற்காக அரட்டை அடிப்பவர்களே. இப்படி இருக்கும்போது இந்தக்கருத்துக்களுக்கு செய்தியறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு சக்தி டீவிக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஏனிந்த குரோதம்.
இதன் மறுபுறம் எமக்கு புரியவைக்கும் விடயம் என்னவென்றால் ரிஷாத் பதியுதீன் இலங்கை அரசியலில் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளார். அதனை தாங்கிக்கொள்ள முடியாத இவர்கள் தங்கள் மீடியா சுதந்திரத்தை தவறான வகையில் பிரயோகித்து தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது பல்முனை அரசியல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

ரங்கா விமர்சிப்பதை போலவும் சித்தரிப்பதை போலவும் ரிஷாத் பதியுதீன் ஒன்றும் மோசமானவர் அல்ல. அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பொறுத்தவரையில் அவர் தனிப்பட்ட வகையில் மனித நேயமிக்க ஒரு இளம் தலைவர் மேட்டுக்குடி அரசியல் என்பதற்கும் அப்பால் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகி மிக குறுகிய காலத்திற்குள் கேபினட் அமைச்சர் என்ற அந்தஸ்த்தை பெற்று பின் முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கியமான ஒருகட்சியின் தலைவராக இருக்கின்றார்.

இலங்கையில் உள்ள ஒரு முஸ்லிம் குடிமகனின் ஆக உயர்ந்த அடைவு இந்த நிலைதான். இந்த நிலையை அடைவதற்கு அவர் கடந்து வந்த பாதைகளும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் அவருக்கும் அவர்சார்ந்த மக்களுக்கும்தான் தெரியும். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு சாதரண குடும்பத்தில் இருந்து வந்த இவருடைய இந்த எழுச்சிக்கு காரணம் அவருடைய விடாமுயற்சியும் போரட்ட குணமும் தான் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையும்தான். இதற்கு நல்லதொரு உதாரணமாக பின்வரும் விடயத்தை கூறலாம். அவர் முதன்முதல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டபோது இலங்கையின் முழு நிர்வாக கட்டமைப்பும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அப்போது பிரதமர் ரணில் அவர்கள் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்திருந்தார்.

அது மறுஅறிவித்தல் வரை இலங்கையில் எந்தவொரு வேலை வாய்ப்புக்கும் திறைசேரி அனுமதி கொடுக்கக்கூடாது. அதனால் குறிப்பிட்ட சில காலங்களுக்கு எந்த விதமான அரச நியமனங்களும் யாருக்கும் வழங்கமுடியாது என்று அறிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் மக்கள் அனுராதபுரம்இ புத்தளம்இ வவுனியா போன்ற பிரதேசங்களில் அகதிகளாக முகாம்களில் தங்கியிருந்தனர். இந்த முகாம்களுக்கு தேவையான வசதிகளையும்இ சேவைகளையும் பெற்றுக்கொடுக்கின்ற பிரதிநிதிகளாக அரச சார்பில் சிலரை சம்பளத்துடன் நிரந்தரமாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய ஒரு தேவைப்பாடு ரிஷாத் பதியுதீன் அவர்களின் எண்ணத்தில் உதித்தது. இவ்வாறு சுமார் 42 இளைஞ்சர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

பிரதமர் ரணில் அவர்கள் இதனை நிராகரித்ததோடு தனது திறைசேரி கொள்கைக்கு இது மாற்றமானது என்று வழங்கமுடியாதென்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அப்போது இதனை கேட்டு சோர்ந்து போகாமல் துடிப்பும்இ வேகமுமிக்க அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இறுதியில் பாராளுமன்றத்திட்கு வேளியே உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்து அதனை செயற்படுத்தினார். 

மற்ற அரசியல்வாதிகள் இவரின் இச்செயலை பார்த்து எள்ளிநகையாடிய போதும் ரிஷாத் பதியுதீன் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. ரிசாத் பதியுதீன் தனது இடம்பெயர்ந்த மக்களுக்காக போராடுகின்ற இந்த செயலைப்பார்த்து அரசு தனது திறைசேரி கொள்கையை தளர்த்தி. ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்த 42 இளைஞ்சர்களுக்கும் முகாம் அலுவலர்கள் என்ற அரச நியமனத்தை வழங்கியது.

இந்த விடயம் அவர் பாராளுமன்ற உறுப்பினராகி ஒருசில நாட்களில் நடந்தேறியது. அதன்பின்னர் தனது இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவற்றை இங்கு பட்டியல் படுத்த முடியாது. மிகமுக்கியமாக வடக்கில் தனது சொந்த இடத்தில் இருந்து புலிகளால் வெறுங்கையுடன் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் முகாம்களில் எந்தவித வசதியும் இல்லாமல்இ வருமானம் இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வந்தனர். 

அவற்றுக்கு தீர்வு காணமுடியாமல் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும்இ சேவைகளையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் முக்கியமான முஸ்லிம் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் திணறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த வேளையில்தான் அரசியல் அதிகாரத்துடன் அந்த மக்களின் பிரதி நிதியாக அடையாளம் காணப்பட்ட ரிஷாத் பதியுதீன் ஒவ்வொரு விடயத்தையும் முன்னின்று தனது மக்களுக்காகப் போராடி பெற்றுக்கொடுத்தார்.வெறுங்கையுடன் அகதிகளாக முகாம்களில் எதிர்காலம் சூனியமான நிலையில் வேதனையில் வாழ்ந்துகொண்டிருந்த வடபுல முஸ்லிம்கள் அனைவருக்கும் தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தார். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியாக வாழக்கூடிய வகையில் காணிகளை பெற்றுக்கொடுத்து அதில் சொந்த வீடுகளை அமைப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை உள்நாட்டு வெளிநாட்டு நிதியுதவிகள் மூலம் பெற்றுக்கொடுத்தார். வருமானமின்றி இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளார். ஏழை குடும்பங்களுக்கு வருமானங்களை ஈட்டக்கூடிய சுயதொழில் வாய்ப்புக்களை வழங்கி அம்மக்களுக்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இன்று அந்த மக்கள் தாங்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட அகதிகள் என்ற எண்ணம் அறவே அற்றுப்போய் எல்லா மக்களையும் போல வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு முழு முழுக்காரணம் இறைவனின் உதவியால் ரிஷாத் பதியுதீன் என்ற தனிப்பட்ட நபரே என்று அந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர். அந்த வகையில் நாம் சந்திக்கின்ற வடக்கு முஸ்லிம்கள்இ என்றும் எங்கள் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் அவருடைய அரசியல் பாதையே எமது பாதை. அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் என்று நன்றியுடன் கூறுவதை கேட்கின்றோம். 

இப்படி பார்க்கும் போது வடபுல முஸ்லிம்களின் வளமான வாழ்கையில் முழுப்பங்கும் வகித்தவர் ரிஷாத் பதியுதீன் தான் என்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம். ரங்கா அவர்களே உங்கள் மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்மீது சேறு பூசுகின்ற எந்த ஒரு அரசியல் கட்சியோ தலைவர்களோ அல்ல என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். 

எனவே நான் மின்னல் நிகழ்ச்சியை நடத்துகின்ற ரங்காவையும் சக்தி டீவி நிருவாகத்தையும் பணிவாக வேண்டுவது என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரபல்யமான அரசியல் தலைவரை விமர்சிப்பதையும் தனிப்பட்ட வகையில் அவர்மீது குறைகளை கூறி குற்றங்களை சுமத்தி சேறு பூசி கேவலபடுத்துவதயும் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் வெறுப்பிலிருந்து சக்தி டீவி தப்பிக்கொள்ள முடியும். 

அரச தரப்புடன் இனணந்து அரசியல் செய்து வருகின்ற சிலமுக்கியமான அமைச்சர்களையும் கட்சித்தலைவர்களையும் தொடர்ச்சியாக ரங்கா அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்கள் சமூகத்தை காட்டி கொடுத்த துரோகிகள் என்பதாகவே இந்தநிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தி வருகின்றார். அந்த வகையில் ரிஷாத் பதியுதீன் மட்டுமல்லாமல் தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாஉல்லாஇ பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஇ அமீர் அலி போன்றோரையும் தொடர்ச்சியாக இந்தநிகழ்ச்சியில் வாரா வாரம் ரங்கா இவர்களுக்கு எதிராக கருத்து கூறக்கூடிய பிற முஸ்லிம் அரசியல் வாதிகளையும் இந்தநிகழ்ச்சியில் சேர்த்துக்கொண்டு வசை பாடுவதை காண்கின்றோம்.

ரங்கா ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியோடு இணைந்து அரசியல் செய்கிறவர்கள் எல்லாருமே தீய குணம் படைத்த வில்லன்களும் இல்லை தங்களது சுய நலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற சுயநலவாதிகளும் இல்லை. அதேபோல் அரசுக்கெதிராக பேசுகின்ற பிற அரசியல்வாதிகள் பொதுநலம் கொண்ட ஹீரோக்களும் இல்லை. தங்களது சுகபோக அரசியல் வாழ்க்கைக்காக சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்ற சுயநலவாதிகளே இவர்கள்.

அதேபோல் உங்களால் தொடர்ச்சியாக விமர்சிக்க படுகின்ற அமைச்சர் அதாஉல்லாஇ அமைச்சர் ரிஷாத் பதியுதீன்இ ஹிஸ்புல்லாஇ அமீர் அலி போன்றோர் தான் சார்ந்த சமூகத்திற்காகவும் பிரதேச மக்களுக்காகவும் எண்ணிலடங்கா சேவைகளையும்இ நலத்திட்டங்களையும் செய்து தமது மக்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றனர். ஏதோ ஒரு வகையில் ஆட்சியில் இருக்கின்ற அரசுடன் இணைந்து இவ்வாறு அளப்பெரிய சேவைகளை இவர்கள் வழங்கிவருகின்றனர். இதற்காக இவர்கள் மீது சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் உங்கள் நிகழ்ச்சியில் பழி சுமத்துவது சரியல்ல.

மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர்கள் மீது சேறு பூசுகின்ற மற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது மக்களுக்காக சாதித்தது என்ன? தமது பிரதேச மக்களின் அரசியல் அபிலாசங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக இவர்கள் என்ன செய்தார்கள்? தேர்தல் காலத்தில் வந்துசெல்லும் இவர்கள் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே பாவித்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்கள் மக்களுக்கு அளப்பெரிய சேவைகளை செய்து வருபவர்களை விமர்சிப்பதற்கு இவர்களுக்கென்ன அருகதை இருக்கின்றது. நான் இவ்வாறு கூறுவதற்காக அரசுக்கு வக்காலத்து வாங்குகின்றேன் என்றோ ரிஷாத் பதியுதீனின் கட்சிக்காரன் என்றோ எண்ண வேண்டாம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் ஆட்சியில் இருக்கப் போகின்றார்கள். இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை சமூகமாகிய எமக்கு அவர்களினால் ஏதோ ஒரு வகையில் நெருக்குவாரம் இருந்துகொண்டே இருக்கும். இந்த அரசியல் நீரோட்டத்திற்குள் புத்தி சாதுர்யமாக காய்களை நகர்த்தி தனது சொந்த அரசியலில் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்திக்கொண்டு தனது சமூகத்திற்கும் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொள்வதுதான் ஒரு திறமையான அரசியல்வாதியின் பண்பு. அந்த அடிப்படையில்தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்இ அமைச்சர் அதாஉல்லாஇ ஹிஸ்புல்லாஇ அமீர் அலி போன்றோர் சாணக்யமான அரசியலை செய்துவருகின்றனர்.

வடமாகான முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் தங்கள் அரசியல் தலைமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை ஏகமாக ஏற்று செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் கிழக்கின் பெரும்பாலான பிரதேசங்களிலும் இவர்தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமோகமாக மக்களின் ஆதரவை பெற்று வியாபித்துள்ளது. இந்நிலையில் இக்கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் மக்களிடம் இருந்து ஓரங்கட்டுவதற்காக முழுமூச்சுடன் மின்னல் நிகழ்ச்சி செயற்படுவது எமது முஸ்லிம் சமூகத்திடையே பாரிய குழப்பத்தை உண்டுபண்ணுவதாக உள்ளது. குட்டையை குழப்பி மீன் பிடிக்கின்ற யுத்தியை இந்நிகழ்ச்சியை நடத்தும் ரங்கா உடனடியாக கைவிட வேண்டும்.

தொலைக்காட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கும் சில ஒழுக்க விதிமுறைகளும்இ கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அந்த அடிப்படயில்தான் தொலைகாட்சி நிகழ்சிகள் பக்கச்சார்பில்லாமல் நடாத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு மின்னல் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க பக்கச்சார்பாகவும் குறிப்பிட்ட தனி நபரை கேவலப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ரங்கா தனக்கு நெருக்கமானவர்களையும் தனக்கு வால் பிடிப்பவர்களையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை நடத்துகின்றார்.

இந்தநிகழ்ச்சியின் மிகப்பெரிய பலவீனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்ற ரங்கா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேவலப்படுத்தி விமர்சிப்பது ஆகும். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் தான் சொல்வது எல்லாம் சரி என்கின்ற மேதாவி தனத்துடன் இந்நிகழ்ச்சியை இவர் நடத்தி வருவதை பலரும் விமர்சிக்கின்றனர்.

இந்திய தொலைக்காட்சிகளின் பல சனல்களில் நேரடி அரசியல் நிகழ்சிகள் ஒளிபரப்பபடுகின்றன. அவற்றின் தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது சக்தி டீவியின் மின்னல் நிகழ்ச்சியை பார்க்கும் போது வெட்கப்படவேண்டி உள்ளது. எனவே சக்தி டீவி நிறுவனம் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவதோடு நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்காவையும் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மேலதிக ஆலோசனைகள் தேவைப்பட்டால் இந்திய தொலைகாட்சிகளின் சனல்களில் ஒளிபரப்பாகும் அரசியல் நேரடி நிகழ்சிகளை பார்த்து கற்றுக்கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -