ஜனாதிபதி மகிந்தவின் வெற்றியில் பங்காளர்களாக முஸ்லிம்களும் முன்வரவேண்டும் -அமைச்சர் அதாஉல்லா







ஏ.ஜே.எம்.ஹனீபா-

திர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 75 வீதத்துக்கு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த வெற்றியில் முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக இணைந்து கொள்ள வேண்டும் என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தெசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்;. 

சம்மாந்துறைப் பிரதேசத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் மாணியம் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (10) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றகையில் வடக்கு கிழக்கிலே வாழுகின்ற தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் பிறந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ முடியாமல் வாழ்வதா சாவதா தெரியாமல் 30 ஆண்டுகள் பட்ட சொல்லென்னா துயரங்களிலிருந்து எம்மை பாதுகாத்த கௌரவத்துக்குரிய ஒரு பெருமகனை உதாசீனம் செய்ய நினைப்பது பாரிய துரோகத்தனமாகும்.
அம்பாறை மாவட்ட மக்கள் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் முஸ்லீம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்நாள் பூராகவும் நன்றிகடன் பட்டவர்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் நாம் இருந்த நிலையினையும் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையினையும் நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் கை வைத்து கேட்டுப் பார்க்க வேண்டும்.

விஷேடமாக முஸ்லீம்களாகிய நாங்கள் கலீமா சென்னவர்கள் ஈமான் கொண்டவர்கள் எமக்கு நன்றி விசுவாசம் என்கின்ற விடயம் நமது மக்களுடன் பின்னிப் பினைந்த ஒன்றாகும் இறுதிவரை எமக்காகவும் எமது சமுகத்துக்காகவம் உதவிய ஒருவரை மறந்த விட்டு பொலனறுவை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து இந்த மாவட்ட மக்களை அவர்களுடைய விவசாய விளைச்சல்களை வயிற்றிலடித்து சூரையாடி ஒருகுடும்பப் பின்னணியை சேர்ந்த ஒருவரை சிலரது மாயைக்காக நம்புவது முட்டாள்தனமான செயலாகும்.

நாம் தொண்டு தொட்டு விவசாயத்தை எமது ஜீவனோபாய தொழிலாக செய்து வருபர்கள் எமது விளைச்சல்களை விற்க முடியாமல் முற்சந்திகளில் பொட்டு தீயிட்டுக் கொழுத்திய வரலாறுகள் எமக்கு ஞாபகம் இருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னரே எமது விவசாயிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர்.

உரமாணியம், தமது விவசாய விளைச்சல்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு, ஏன் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறியபடி விதை நெல்லுக்கான மாணியம் போன்ற விடயங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

எனவேதான் விவசாயிகள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை மறக்கக் கூடாது நீங்கள் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரங்களில் ஈடுபடுபவராக மாறவேண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ என்பவர் வெற்றி பெறுவது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகும் அந்த வெற்றியின் செந்;தக் காறர்களாக நாம் மாற வேண்டும் என கெட்டுக் கொள்கின்றேன்.

எமது வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த காலத்தில் சில அரசியல் தலைமைகளின் பிழையான வழிகாட்டுதல்கள் காறனமாக வாக்களிக்காமல் தவரிழைத்த வரலாறுகள் உண்டு அவ்வாறான சந்தர்பங்களிலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று எந்த குரோதமும் பாராமல் நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றி சமாதானத்துக்கும் சகவாழ்வுக்கும் அளப்பரிய சேவைகளை செய்து அழிந்த பூமியை அபிவிருத்தியடையச் செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் உற்பட பலர் கலந்த கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :