கல்முனையில் செஸ்டோ அமைப்பினால் ஜனாஸா அம்புயூலன்ஸ் சேவை






எம்.வை.அமீர்-

ல்முனை பிரதேசத்தில் மிக நீண்டகால தேவையாக இருந்த ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கான வாகன வசதியை, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1999ம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய மாணவர் அமைப்பான செஸ்டோ என்றழைக்கப்படும் சாஹிரியன்’ஸ் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் முழு முயற்சியின் காரணமாக அம்புயூலன்ஸ் வாகனம் ஒன்று பெருமணம் படைத்தவர்களின் உதவியுடன் இப்பிராந்திய மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

செஸ்டோ அமைப்பின் தலைவர் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்ப்பு மண்டபத்தில் 2014-12-07ம் திகதி இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த அம்புயூலன்ஸ் வாகனம் இப்பிராந்தியத்தில் ஜனாஸாக்களை ஏற்றி இறக்குவதற்கு உத்தியோக பூர்வமாக மக்களது பாவனைக்கு விடப்பட்டது.

பொறியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வில் அஷ்சேக் ஹசன் பாரிட் பின்நூரீ அவர்கள் விசேட சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார். நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.பதூர்தீன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அதிகாரி டாக்டர் என்.ஆரீப், வாகன பரிசோதணை அதிகாரி ஏ.எல்.எம்.பாறுக் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் டாக்டர் ஐ.எல்.ஏ.அஸீஸ் சாய்ந்தமருது பள்ளிவாசல் நபிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா போன்றோர் செஸ்டோ அமைப்பின் செயற்பாட்டை பாராட்டிப் பேசினார். செஸ்டோ அமைப்பினரினால் நிகழ்வின் இறுதியில் செஸ்டோ என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

குறித்த ஜனாஸா அம்புயூலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு அம்புயூலன்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ய உதவிய பெருமணம் படைத்தவர்களும் பெரும் திரளான மக்களும் பங்கு கொண்டனர். நிகழ்வு அனுசரணையை லீ மெரிடியன் நிருவாகம் மேட்கொண்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :