ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடைய செய்து நாட்டின் ஜனாதிபதியாக்கும் முகமாகவும், எதிர்வரும் புதன் கிழமை பொது வேட்பாளரை ஆதரிக்கும் முகமாக கல்குடாவில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தினை எவ்வாறு செயல் முறைப்படுத்துவது என்பதனை அடிப்படையாக கொண்டும் பொதுவான நிருவாக சபை ஒன்றினை தெரிவு செய்வது சம்பந்தமான மக்கள் ஒன்று கூடல் ஒன்று இன்று 07.12.2014 மாலை 4மணியள்வில் ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் SMT ஹாஜியார் வீதியில் உள்ள MM.முஹம்மட் புஹாரி என்பவருடைய அரிசி ஆலையில் இடம்பெற்றது.
நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கும் முகமாக சகல வேலைதிட்டங்களை கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் முன்னெடுப்பதினை அடிப்படையாக வைத்து செயற்குழுவுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர், ஓவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் இருந்தும் செல்வாக்கு மிக்கவர்கள் நிருவாக சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். RM.புஹாரீடீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வொன்று கூடலில் பொது அணியை தவிர்ந்த எந்த கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், முக்கியமாக மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கும் முகமாக அரசாங்கத்தின் நிலைமையினை மாற்றியமைத்தல் என்றும், கல்குடாவில் உள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்பது பற்றி பள்ளிவாயல் நிருவாகங்களுக்கு அறிவுறுத்துதல், எல்லோரும் இதயசுத்தியுடன் சுய இலாபங்களை புறம்தள்ளிவைத்துவிட்டு பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக தேர்தல்காலங்களில் செயற்படுதல் போன்ற முக்கிய முடிவுகள் ஏகமானதாக முனுமொழியப்பட்டு தீர்மானமாக எடுக்கப்பட்டது.
இதன் போது மைத்திரிபாலவின் வெற்றிக்கான செயற்பாட்டுக் குழுவின் நிருவாகத் தலைவராக MH. மீராமொஹைடீன் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டதுடன், உபதலைவர்களாக இஸ்ஹாக் மெளளவி, MI.ஹமீட், ஜனாப் பசீர்,ஆகியோரும் செயலாளராக RM.புஹாரிடீனனும் உப செயலாளர்களாக ஓட்டமாவடி பிரதேசத்துக்கு MM.உவைஸ், மாவடிச்சேனைக்கு KL.அஸ்மி ஆகியோரும், குழுவின் பொருளாளராக MP.நசார் ஹாஜியாரும் ஏகமானதாக முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இதனை சகல மக்களிடத்திலும் கொண்டு செல்லும் முகமாக ஓவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களும் தேர்தல் களத்தில் தன்னம்பிக்கையும் செயற்படும் திறமைமிக்கவர்களும் தெரிவு செய்யப்பட்டு பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment