அகில இலங்கை இந்து மாமன்றம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் நடாத்தும் சிவதொண்டனர் அணியினருக்கான பயிற்சி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அருளுரையுடன், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் விடைகொடிச் செல்வர் சி.தனபாலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கொழும்பு கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன், விஸ்வ ஹிந்துப் பரிசத்தின் வர்த்தகப் பிரதி நிதியும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவருமான சி.அருளானந்தம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் ஐநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பேரவையின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கொழும்பு கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி.ம.பாலகைலாசநாத சர்மா, அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் விடைகொடிச் செல்வர் சி.தனபாலா, சைவவித்தகர்களான வே.சசிகரன், யோ.கஜேந்திரா ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
அத்தோடு இங்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கான குழு நிலை செயற்பாட்டு போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன், கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயம், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவர்களின் நாடகமும், செட்டிபாளையம் மகா வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணா வித்தியாலய மாணவர்களின் கூத்தும் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிவதொண்டர் என பட்டம் சூட்டி சால்வை மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment