ஓட்டமாவடி, மட்டக்களப்பு, பிரதான வீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் சனிக்கிழமை (06.12.2014) மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டதுடன் 700க்கும் அதிகமான பொதுமகளும் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரி தேசமான்ய மங்கள சி செனரத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்மீள் குடியேற்ற பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதீதியாக கலந்து கொண்டு காரியாலையத்தினை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களான எஸ்.ஏ.றபீல், எஸ்.எம்.சந்திரபால, ஜனாதிபதி செயலக அதிகாரி பி.ஜி.தயானந்த, முன்னால் மாவட்ட அமைப்பாளர் கண்டி பிராவோ, காரியாலைத்தின் OPERATING முகாமையாளர் ஏ.எஸ்.எம். சதீக், மற்றும் பிரதேச தமிழ் முஸ்லீம் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
காரியாலையம் சம்பந்தமாக இணைய நாளிதல்களுக்கு கருத்து தெரிவித்த Operating முகாமையாளர் ஏ.எஸ்.எம்.சதீக்…. இக்காரியாலையமானது சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக மாவட்டத்தில் எங்கும் இலாதாவாறு அமையப் பெற்றுள்ளதாகவும், பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான உறவினைப் பலப்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும் என தெரிவித்ததோடு, 1990ம் ஆண்டுக்கு பிற்பாடு முஸ்லிம் பெண்னொருவர் தமிழ் மகனான பிரதி அமைச்சர் வினாயமூர்த்தி முரளிதரனுக்கு மாலை அணிவித்து வரவேற்றமையானது முன்பிருந்த தழிம் முஸ்லிம் உறவினை ஞாபகப்படுத்துவதாக அமைந்திருந்தது என தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment