ஜனாதிபதி தேர்தலில் நடுநிலைமை வகிக்கின்றது கல்குடா மஜ்லிஸ் ஷுரா!

திர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கல்குடா மஜ்லிஸிஸ் சூரா சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 05.12.2014 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் மாவடிச்சேனை ஜும்மா பள்ளிவாயலில் ஒன்றுகூடி பல முக்கியமான விடயங்களை கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவினை நிறைவேற்றினர்.

எதிர்நோக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து சூரா சபையின் தலைவர் அஸ்ஸெய்க் ஏ.ஜீ. ஹாமித் ஸதகா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துறையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கல்குடா மஜ்லிஸிஸ் ஷுரா சபையானது நடுநிலைமை வகிப்பதென முடிவெடுக்கப்பட்டதோடு, அது சம்பந்தமான ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது.

மேலும், தற்போது மஜ்லிஸிஸ் ஷுரா சபையின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்து கொள்வதற்காக முதற்கட்டமாக சபையின் உறுப்பினர்களிடத்தில் முடியுமான அளவு ஒரு தொகைப் பணம் அறவிடப்பட்டதோடு, எதிர்வரும் காலங்களில் ஜும்மா பள்ளிவாயல்கள், வர்த்தக சங்கங்கள், ஏனைய பொது அமைப்புக்களின் உதவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தீர்மானத்தை ஏகமானதாக நிறைவேற்றியதுடன், பிறைந்துறைச்சேனையில் பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுக்கப்பட்டுள்ள பொது விளையாட்டு மைதானத்துக்கு உடனடியாக சுற்றுமதில் சுவர் தேவைப்படுவதனால் அதற்காக தேவைப்படுக்கின்ற ஆறு இலட்ச்சம் பெறுமதியான பணத்தினை மிக விரைவில் ஏற்பாடு செய்து கொடுத்தல் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

****சூரா சபையின் ஊடக அறிக்கை பின்வருமாறு****

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி எமது நாடு ஒரு முக்கிய நிகழ்வை எதிர்பார்த்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜனநாயக நாடொன்றில் எவருக்கும் எந்த கட்சியிலும் இனைந்து போட்டியிட முடியும் என்பது போல் மக்கள் தாம் விரும்பும் எவருக்கும் தமது வாக்கை அளிக்கவும் முடியும.; இது அவரவர் அரசியல் உரிமையாகும.; இந்த அடிப்படையில் இத்தேர்தலை முஸ்லிம்களாகிய நாம் மிக மிக பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மஜ்லிஸ் ஷுரா வினயமாக வேண்டிக்கொள்கிறது.

கல்குடா மஜ்லிஸ் ஷுரா அதன் ஆரம்பம் தொட்டு இன்றுவரை எந்த ஒரு வகையிலும் தமது செயற்பாட்டில் அரசியல்சார் விடங்களில் யாருக்கும் எந்த வகையிலும் சார்பாக பணியாற்றாத ஒரு அமைப்பாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த அடிப்படையில் 2015 ஜனாதிபதி தேர்தலில் எமது சபையின் தீர்மாணத்தின் பிரகாரம் மஜ்லிஸ் ஷுரா எந்த ஒரு கட்சிக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ செயற்பட மாட்டாது. அத்துடன் எமது அமைப்பை சார்ந்த எவரினதும் தனிப்பட்ட செயற்பாடுகள் எமது அமைப்பை பிரதிபலிக்காது. அது அவரவர் உரிமையாகும். எனவே எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி எவரும் அரசியல்சார் விடங்களில் செயற்ப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது.

முஸ்லிம்களாகிய நாம் எமது உரிமைகளையும் எமது சமூகம் சார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது இருப்பு மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பில் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்படுவது அவசியமாகும.; இந்த புத்திசாதுர்யமான செயற்பாட்டை இக்காலகட்டத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும்; எமது சமூகம் எதிர்பார்த்து நிற்கின்றது.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் எமது அரசியல்வாதிகள் தமக்குள் உள்ள கட்சி பேதங்களை மறந்து தனிப்பட்ட நலனுக்கு அப்பால் தமக்கு தரப்பட்டுள்ள அமானிதத்தை தூரநோக்குடன் செயற்படுத்தி எமது சமூகத்தின் பொதுப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் என்பதை மஜ்லிஸ் ஷுரா வலியுறுத்துகிறது.

தேர்தல் காலங்களில் நாம் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளுமாறும் மற்ற சகோதரனின் மானம் தொடர்பில் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்குமாறு மஜ்லிஸ் ஷுரா அனைத்து மக்களையும் அரசியல்வாதிகளையும் விணயமாக கேட்டுக்கொள்கிறது.

ஏ.எம். ஜுனைட்.
பொதுச் செயலாளர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :