இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதனை எதிர்கொள்வதில் ஊடகவியலாளர்களின் பங்கும்...!

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதனை எதிர்கொள்வதில் ஊடகவியலாளர்களின் பங்கும் எனும் தொனிப்பொருளில் முழு நாள் கருத்தரங்கொன்று 06-12-2014 நேற்று சனிக்கிழமை கொழும்பு-9 தெமடகொடையிலுள்ள நிதாஉல் கைர் கட்டிட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்;கில் பிரதம அதிதியாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு இஸ்லாத்தின் பார்வையில் ஊடகப் பணி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் நவ்பர் கபூரியும், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் எம்.அஜ்வதீனும்,தேர்தல் அறிக்கையிடல் எனும் தலைப்பில் என்.எம்.அமீனும்,சமூக ஊடக அறிக்கையிடல் எனும் தலைப்பில் எம்.பீ.எம்.பைரூஸூம் விரிவுரைகளை நடாத்தினர்.

இறுதியில் கருத்தரங்கில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புரவலர் ஹாஸிம் உமர்,சிரேஷ்ட ஊடகவியலாளர்களான நிலாம்,தாஹா எம் முஸம்மில் ,சிரேஷ்ட அறிவிப்பாளர் அஹமட் முனவ்வர்,இர்சாத் ஏ காதர் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரமுகர்கள், உலமாக்கள்,தேசிய மற்றும் உள்ளுர் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் கடமையாற்றும் அலுவலக,பிராந்திய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ,செய்தியாளர்கள் என பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :