அமைச்சர் அதாஉல்லா கேட்டதைக் கொடுத்துள்ளேன் -ஜனாதிபதி அக்கரைப்பற்றில் ஆற்றிய உரை

அபூ-இன்ஷாப்-

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில் அக்கரைப்பற்றுக்கு வந்த போது என்னுடைய சொந்த சகோதரனைப் போல் நேசிக்கின்ற அமைச்சர் அதாஉல்லாவிடம் நான் கேட்டேன் கிழக்குக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது கிழக்க மக்களுக்கு ஒன்றும் தேவையில்லை பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தத்தை நிறைவு செய்யுமாறும், கிழக்கை வடக்கிலிருந்து பிரித்து தருமாறும் கோரினார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இன்று (20) மாலை அக்கரைப்பற்று பஸ்தரிப்பிட முன்றலில் ஏற்பாடு செய்யப்பட் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்திலே தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கின்ற மழையினையும் பொருட்படுத்தாது இந்த இரவுப் பொழுதில் நின்று கொண்டிருகட்கின்ற மக்களுக்கு முதலில் நான் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
30 வருடகாலம் இந்த நாட்டில் நிலவிய கொடுர பயங்கரவாதம் காரணமாக பள்ளிவாசலுக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டனர், பாடசாலைக்கு சென்றவர்கள், வைத்தியசாலைக்கு சென்றவர்கள், சந்தைக்கு சென்றவர்கள். 

வயல்களுக்கு சென்றவர்கள், கடலுக்கு சென்றவர்கள், ஏனைய தொழில்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டனர்.
அது ஒரு இருண்டகாலமாக காணப்பட்டது அதனை நான் 2005ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்குள் உங்கள் அமைச்சர் அதாஉல்லா கேட்டது போன்று நிறைவெற்றிக் கொடுத்தேன்.

இன்று நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதுமாத்திரமன்றி நீங்கள் எங்கும் செல்லாம் உங்கள் பிள்ளைகளின் கல்வியினை தொடரலாம், உங்கள் தொழில்களை சிறப்பாக மேற்கொள்ள முடியும் அதற்கான வசதிகள் அனைத்தையும் நான் செய்துள்ளோன்.
நான் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது எப்போது மத்தளயிலிருந்து புகைவண்டி இங்கு வருவது என்பதை.

அதுமாத்திரமன்றி வசதியில்லாத ஏழைமக்கள் புனித ஹஜ்ஜூக்கு செல்வதற்கு நான் வசதிகளையும் உதவியினையும் செய்யவுள்ளேன் அதற்கு ஏனைய வசதிபடைத்தவர்கள் எனக்கு உதவ வேண்டும்.
தாய்மார்களே, சகோதரர்களே உங்கள் எதிர்காலம் பற்றி, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நான் சிந்தித்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

நீங்கள் சிந்திக்க வேண்டும் நகரம் கிராமம் என்ற போதமில்லமல் சகல பிரதேசங்களிலும் கிழக்கின் நவோதயத்திட்டத்தின் கீழ்; மஹிந்தோதய கல்விக் கூடங்களை உருவாக்கியுள்ளேன்.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியை தொழில் நுட்பங்களை கற்று வழிதவராமல் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் தொழில்கள் புரிந்த இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமிக்கநாடாக ஆக்க இனபோதம்,மதபேதம்,குலபேதம் மறந்து இலங்கைத் தாயின் பிள்ளைகளாக வாழ்வோம் எனவும் தெரிவித்தார்.

உங்களிடத்திலே சில முனாபிக்குகள் வருவார்கள் அவர்களிடம் நீங்கள் ஏமார வேண்டாம் சில முனாபிக்குகள் என்னிடம் வந்து என்னுடைய வீட்டில் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகனம் மறுபக்கம் சென்றார்கள் இவர்களைப் பற்றி நாம் எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

அவர்களுடைய கொள்கைப் பிரகடனத்தில் என்னுடைய வரவு செலவுத் திட்டத்தில் முன் வைத்த திட்டத்தினைய வைத்துள்ளார்கள் வேறு ஒன்றும் இடம்பெறவில்லை.

அதற்கு மேலதிகமாக அரசாங்க சேவையின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான முயல்கின்றனர் இதைதான் அன்று ஐக்கிய தேசிய கட்சி செய்தது அதே போன்றுதான் வங்கிகளையும், துறைமுகத்தினையும், விமானநிலையம் உள்ளிட்ட பல துறைகளை தனியார் மயப்படுத்திக் கொள்வதற்கான பாவகாரியங்களுக்கு இவர்கள் வித்திடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

உங்களுடைய சகல பிரச்சினைகளையும் அமைச்சர் அதாஉல்லா என்னிடம் கூறுவார் நான் அவரிடம் சகல விடயங்களையும் கூறியுள்ளேன் நான் உங்களின் பாதுகாவலன் என்னை நம்புங்கள் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -