அ.றஹ்மான் -
அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் நாளை திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு அட்டாளைச்சேனை ப நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசகர் அன்வர் நௌசாத், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்படுவதோடு கழகத்திற்கான பதிய சீருடை அறிமுகமும் இடம்பெறவுள்ளதாகவும் கழகத்தின் செயலாளர் பைசல் இஸ்மாயில் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment