ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் நாளை -பாதுகாப்பு அதிகரிப்பு

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் நாளை 8ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை ராஜ­கி­ரி­ய­விலுள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. 

ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­தை­ய­டுத்தே மேற்­படி வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. தாக்கல் செய்­யப்­படும் வேட்பு மனுக்கள் தொடர்­பாக ஏதேனும் ஆட்­சே­ப­னைகள் இருப்பின் அதே­தினம் 9 மணி முதல் 11.30 மணி

வரை ஆட்­சே­ப­னை­களைத் தெரி­விக்க முடியும்.

அர­சியல் கட்­சி­யொன்றின் சார்­பாக போட்­டி­யிடும் வேட்­பாளர் 50 000 ரூபாவும் ஏனைய வேட்­பா­ளர்கள் 75 000 ரூபாவும் கட்­டுப்­ப­ண­மாக செலுத்த வேண்டும். கட்­டுப்­பணம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை 7 ஆம் திகதி பகல் 12 மணி வரை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் வேட்பு மனுக்கள் நாளை ஏற்­றுக்­கொள்­வதால் கொழும்பு நகரின் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல்கள் செய­ல­க­முள்ள ராஜ­கி­ரிய பிர­தே­சத்தில் விசேட பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. மேலும் தேர்தல் செய­ல­க­முள்ள ராஜ­கி­ரிய பிர­தே­சத்­தி­லுள்ள கட்­அ­வுட்­டு­களை உட­ன­டி­யாக அப்­பு­றப்­ப­டுத்­தும்­படி தேர்­தல்கள் ஆணை­யாளர் மகிந்த தேசப்­பி­ரிய சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் தெரி­விக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட இது­வரை மூன்று சிறு­பான்மை வேட்­பா­ளர்கள் உட்­பட 18 பேர் கட்­டுப்­பணம் செலுத்­தி­யுள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

16 கட்­சி­களும் 2 சுயேட்­சைக்­கு­ழுக்­களும் கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­யுள்­ளன. நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி சார்பில் சுந்­த­ரம்­ம­கேந்­திரன், ஐக்­கிய சமா­தான முன்­னணி சார்பில் இப்­ராஹிம் நிஸ்தார் மொஹமட் மிஹ்லார் மற்றும் சுயேட்சையாக முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.இல்யாஸ் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள சிறுபான்மையின வேட்பாளர்களாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :