மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கி மக்கள் முகாம்களில்...!

 ட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் வாழ்கின்றனர்.

அத்தோடு இம்மழை தொடர்ந்து பெய்வதால் பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதோடு, உறுகாமம் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டாதால் சந்தமணமடு ஆற்று நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமான நீர் கிராமத்திற்குள் சென்றமை காரணமாக போக்குவரத்துப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு சந்திவெளி படகுப் பாதை மற்றும் மாவடியோடைப்பாலம் ஊடாக குறைந்த பட்ச போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வயல் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் அன்றாட வாழக்கை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களும் பெரு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும், மேலும் தொடர் மழையாலும் குளங்களின் வான்கதவு திறக்கப்படுவதாலும் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய சூழல் உள்ளதாலும் இம்மக்களுக்கு அவசிமாக தேவைப்படும் உதவிகளை வழங்கும் முகமாக இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கேட்டுக் கொள்கின்றனர்.

உதவி செய்ய விரும்பும் அமைப்பு அல்லது தனி நபர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரில் தங்களது ஆதரவை வழங்கலாம் என்பதையும் தெரிவிக்கின்றனர். வழங்கப்படும் உதவிகளுக்கு பற்றுச்சீட்டு மற்றும் நன்றி நவிலல் கடிதம், உதவி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் உட்பட்டவை பேரவையால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மேலும் தெரிவித்தனர்.
இதன் தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கீழ்வரும் தொடர்புகளை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தொலைபேசி இலக்கம்: 0094652228273, 0094652228018, 0094776034559, 0094653656608
தொலை நகல் இலக்கம் : 0094652228273
மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com / yoheswaran.mp@gmail.com

வங்கி தகவல் சார்பாக
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ((Federation of Young Men’s Hindu Association)  என்ற பெயரில் மட்டக்களப்பு கொமர்ஷியல் வங்கி (Commercial Bank)  கணக்கு இலக்கம் : 1105040264. SWIFT CODE: CCEYLKLX, Bank Code : 7056-105 இதில் பணங்களை அனுப்பி வைக்கலாம். அத்தோடு உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தல் அவசியமானதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -