இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு - செயலமர்வு-படங்கள்.





பழுலுல்லாஹ் பர்ஹான்-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள், சிறுவர் பொலிஸ் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கான செயலமர்வு கடந்த 05.12.2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. இந்துகருணாரட்ண மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும்; கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் தவிசாளரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான. நீதிபதி. பிரியந்த ஆர்.பி.பெரேரா பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

அவருரையின் போது மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியது பொலிசாரின் கடமை எனவும், அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகள் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதை அனைவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமெனவும், சட்டத்தினை மதித்து அனைவர்களும் செயற்பட வேண்டுமெனவும், ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டதின்படி பரிகாரம் பெறமுடியும் எனவும் கூறியதுடன் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் போது விரிவுரையாளர்களாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி.பிரதீபாமகாநாமஹேவாவும், ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர். சட்டத்தரணி. நிமால் புஞ்சிஹேவாவும் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :